அன்று நடந்தது என்னவென்றால்... விளக்கமளித்த அஸ்வின்... மீண்டும் முதலில் இருந்தா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் முறையாக ஆடியோ லான்ச் குறித்து அஸ்வின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அன்று நடந்த அவருடைய நிகழ்வு பற்றிய கருத்துக்களை கேட்டு மீண்டும் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

அஸ்வினின் முதல் பதிவு

அஸ்வினின் முதல் பதிவு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த அஸ்வின் வெள்ளித்திரையில் முதல்முறையாக தான் நடித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதை பேசத் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கித் தவித்த தருணத்தைப் பற்றி மீண்டும் சமூக வலைத்தளத்தில் பேசியிருக்கிறார். இவருடைய முதல் பதிவு ரசிகர்களை மேலும் கலாய்ப்பதற்கு தூண்டியுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் அதைப்பற்றியே நெட்டிசன்கள் கலாய்த்து வருவது அஸ்வினுக்கு பெருத்த வருத்தமாக இருந்து வருகிறதாம்.

10 வருட போராட்டம்

10 வருட போராட்டம்

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண் ரசிகர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கவர்ந்த ஒரு கேரக்டராக வலம் வந்து கொண்டிருந்த அஸ்வின், தற்போது நெட்டிசன்கள் கலாய்க்க பட்டு வருகிறார். தொடர்ந்து மீம்ஸ்களில் இவருடைய புகைப்படங்கள்தான் இடம்பெற்று வருகிறது. பத்து வருடங்களாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர் தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார். ஆனால் தொடங்கிய இடத்திலேயே இவரால் இவ்வளவு பெரிய சோதனையா?? என்று தன்னுடைய நிலைமையை நினைத்து வருந்துகிறார் போல, அதனால் தான் டுவிட்டரில் இப்படி ஒரு பதிவிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பந்தாவான பேச்சு

பந்தாவான பேச்சு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இதன் மூலம் பல பெண் ரசிகர்களின் கிரஸ்ஸாக இருந்து வருகிறார். இவருடைய சிரிப்பு பல பெண்களுக்கு ஃபேவரைட் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருக்கு அதிகமான நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொண்டார். என்ன சொல்லப்போகிறார் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குதுங்க, கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன் என்று இவர் பேசிய இருந்தார். இவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

வருந்திய அஸ்வினின் முதல் பதிவு

வருந்திய அஸ்வினின் முதல் பதிவு

இதுகுறித்து விளக்கம் அளித்த அஷ்வின் தன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாகவும், யாரையும் குறை சொல்ல அப்படி பேசவில்லை என்றும் கூறியிருந்தார். அஸ்வினின் இந்தப் பேச்சை பல சினிமா பிரபலங்களும், விமர்சனங்களும் விமர்சித்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட மறைமுகமாக கமல் இதை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வீடியோ ஒன்றையும் அஸ்வின் வெளியிட்டுள்ளார். அதில் இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன். நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அங்கு போய் நின்றதும், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+