புண்படுத்திட்டே இருக்கீங்க.. கொஞ்சமாவது ரெஸ்ட் விடுங்க..!! நொந்துபோன அஸ்வின் ரசிகர்கள்
சென்னை: ரசிகர்களை கவர்ந்த கதாநாயகனாக இருந்த அஸ்வின் தற்போது மீம்ஸ் கிரியேடடர்களை கவர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சி மூலமாக உச்சத்தில் வலம் வந்து கொண்டிருந்த அஸ்வின் தற்போது நெட்டிசன்களின் மீம்ஸ்களில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
குறும்புக்கார நெட்டிசன்கள் கேலண்டர் அட்டையில் கூட அஸ்வினை விட்டுவைக்காமல் கலாய்த்து வருகிறார்கள்.

வித்தியாசமான விளம்பரம்
விளம்பரம் செய்து ட்ரண்ட் ஆவதை விட... ட்ரெண்டிங்கில் இருப்பதை வைத்து விளம்பரம் செய்வதன் மூலம் எளிதில் ரீச் ஆகி விடலாம் என்று நினைத்து மதுரைக்காரர் ஒருவர் தன்னுடைய நிறுவனத்திற்காக அஸ்வினை வைத்து டிசைன் செய்துள்ள போஸ்டர் இணையத்தில் நகைச்சுவையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அஸ்வின் பார்த்தால் கூட இந்த ஒரு காலண்டரை நினைத்து நினைத்து சிரிப்பார். அந்த அளவிற்கு டிசைனர் டிசைன் பண்ணியுள்ளார்.

புது யுக்தி
தமிழ்நாட்டு ரசிகர்கள் தாங்கள் செய்யும் வியாபாரத்திற்கும், தொழிலுக்கும் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் போட்டோக்களை விளம்பரத்திற்காக பயன்படுத்துவது புதிதல்ல.. மற்றவர்கள் பார்க்கிறார்களோ!?இல்லையோ!? தாங்களே மீண்டும்.. மீண்டும்.. அந்த விளம்பரத்தை பார்த்து பூரித்துக் கொள்வார்கள். இதிலிருந்து சற்று வித்தியாசமாக யோசித்த ஒருவர் தமிழகமே திரும்பி பார்க்க வேண்டும் என்ற நோக்கில் டிரண்டிங்கில் இருக்கும் அஸ்வினின் பேச்சுக்களையும், படத்தையும் வைத்து செய்துள்ள விளம்பரத்தை பார்த்து அந்த கடைக்காரரின் கிரியேட்டிவிட்டி லெவலை என்ன.. சொல்வதென்று.. தெரியவில்லை..!!

வைரலாகும் காலண்டர் விளம்பரம்
சில நாட்களுக்கு முன்பு கூட மாநாடு படத்தின் வசனங்களையும், அதை படத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யாவின் போட்டோவையும் வைத்து பிரியாணி கடைக்காரர் செய்திருந்த விளம்பரம் வேற லெவலில் வைரலானது. அதே பாணியில் தற்பொழுது அஸ்வினையும், அஸ்வின் பேச்சுக்களையும் வைத்து காலண்டர் கம்பெனி காரர் செய்திருக்கும் விளம்பரம் பார்த்து நகைச்சுவையுடன் ஷேர் செய்து வருகின்றனர்.
Recommended Video

நொந்துபோன அஸ்வின்
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல்.. தன் ஒருநாள் பேச்சு.. தன்னுடைய இத்தனை வருட உழைப்பை அனைவரிடமும் மறக்கச் செய்தது குறித்து வருத்தத்தில் இருக்கும் அஸ்வின், இம்மாதிரியான விளம்பரங்களை பார்த்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை...!? எது எப்படியோ இந்த போஸ்ட்டை டிசைன் செய்தவருக்கு ஆர்டர் குவிகிறது இல்லையோ.. வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.. பப்ளிசிட்டி செய்வதில் தங்களை மிஞ்ச ஆள் இல்லை என்று அவ்வப்போது நிரூபித்து வரும் மதுரைக்காரர்கள் இந்த போஸ்ட் இன் மூலம் மீண்டும் ஒரு முறை அதனை நிரூபித்துள்ளனர்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications