புது கெட்டப்பில் மாஸ்.. பச்சபுள்ள அஸ்வினா இது.. சர்பிரைஸ் ஆன ரசிகர்கள்!
சென்னை: முரட்டு லுங்கியும், கரடு முரடு தாடியும், முறுக்கி விட்ட மீசையுமாக ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார் சாக்லேட் பாய் அஸ்வின்.
சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஸ்வின் சவரம் செய்யாமல் போட்டுள்ள போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.
கலர் கைலியுடன் மாஸ் தாடியுடன் லேசாக முறுக்கிய மீசையுடன் இருக்கும் கெட்டப்புகள் பொதுவாக கேரளா ஹீரோக்களுக்கு நச்சென்று பொருந்தும் ஆனால் நம்ம அஸ்வின் அவர்களுக்கே டப்பு கொடுக்கிறார்.

சூப்பர் கெட்டப்
அந்த அளவிற்கு நச்சென்று அந்த கெட்டப்பில் பொருந்தும் அளவிற்கு இப்போ ஸ்டில்கள் போட்டுள்ளார். ஒருவேளை தனது கவனத்தை மலையாளக் கரையோரம் திசைதிருப்பி இருக்கிறாரோ அஸ்வின் என்று எண்ணத் தோன்றுகிறது. அஸ்வின் இந்த போஸ்ட்டை போட்டதும் ரொம்ப நாளாக அஸ்வின் போஸ்டருக்கு காத்திருந்தார் போல் அவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட் களையும் கண்ணை மூடிக்கொண்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

கைலி கட்டிய அஸ்வின்
முழங்கை வரை மடக்கிய சட்டையில் பச்சை கைலியுடன் பச்சைநிற பேக்ரவுண்டில் பயங்கரமாக இருக்கும் அஸ்வினை பார்த்து பச்சப்புள்ள அஸ்வின் ஆ இப்படி என்று வியந்து வருகின்றனர். "நீ வா தலைவா" "நீ வா தலைவா" என்று இவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும்,அஸ்வின் வருத்தப்படுகிறாரோ என்னவோ சிவாங்கி இன்னும் இந்த வீடியோவை லைக் பண்ணவில்லை என்று ரசிகர்கள் ஏகத்துக்கும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

ஆக்ஷன் பாய்
இவரது முந்தைய நிகழ்ச்சிகள் மற்றும் ஆட்டிட்யூட் டை பார்த்து இவரை எல்லோரும் சாக்லேட் பாய் என்றே நினைத்திருப்பார்கள், ஆனால் ஆக்சன் ஹீரோவாக தனக்கு இன்னொரு முகம் இருப்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார். தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்பட்ட மனிதராக டைம்ஸ் ஆப் இந்தியாவால் விருது அளிக்கப்பட்ட அஸ்வின் எந்த கெட்டப்புகளில் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள்.

பெண் ரசிகர்கள்
அத்தோடு நில்லாமல் தலையில் வைத்தும் கொண்டாடுவார்கள். நிவின்பாலி, பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் வரிசையில் அஸ்வினுக்கு ஒரு சீட்டு போடுங்கள் என்று இவரது ரசிகர்கள் சீட் கேட்டு வருகின்றனர்.ஏற்கனவே சாக்லேட் பாயாக தங்களது கனவில் வரும் அஸ்வினின் இந்த புது அவதாரத்தைப் பார்த்து எந்த லுக்கில் கனவு காண்பது என்று சில பெண் ரசிகைகளும் புலம்பி வருகின்றனர்.

அதிரடி ஹீரோ
குக் வித் கோமாளி மூலம் தமிழ் நாட்டு மக்களின் வீடுகளில் புகுந்து பாச மழையில் நனைந்தவர் அஸ்வின். அதிலும் ஷிவாங்கி, அஸ்வின் ஜோடி செம ஹிட்டாகி விட்டது. இப்போது அஸ்வின் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கமெண்ட்டுகள் எப்படி இருந்தால் என்ன.. மீசையை முறுக்கி பார்வையிலேயே எதிரிகளை மிரட்டி ஒரே பைட்டில் இருபது முப்பது எதிரிகளை வீழ்த்த தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு ஆக்சன் ஹீரோ ரெடியாகி விட்டார்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications