கண்டிப்பா லவ்தான் பண்ணுவேன்.. அடிச்சுச் சொல்லும் அஷ்ரிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கலக்கி கொண்டிருக்கும் அஷ்ரிதா இணையதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது இவரது வீடியோக்களும் போட்டோக்களும் இளைஞர்களை கவர்ந்து வைரலாக பரவி வருகிறது.

குழந்தை நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருப்போம் அதுவும் மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிகர் நாகேஷ் உடன் அம்மா அப்பா எனும் சீரியலில் நடித்திருக்கும் இவர் எல்லோருக்கும் இன்று வரைக்கும் குட்டி குழந்தையாகத்தான் தெரிகின்றாராம்.

அதன்பிறகு படிப்பில் கவனத்தை செலுத்த தொடங்கிய இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இவரது தந்தை இறந்து விட்டதால் அதன் பிறகு இவரின் அம்மா புஷ்பா நடிப்பை விட்டு விட்டாராம்.

 அப்பாவின் ஆசை

அப்பாவின் ஆசை

இவரின் தந்தையின் ஆசை இவரை ஒரு நடிகையாக ஆக்கவேண்டும் என்பதுதான். இவரிடம் சொல்லிச் சொல்லி தான் வளர்த்தராம் . சினிமாவில் பெரிய நடிகையாக பார்க்க வேண்டும் என்பது தானாம். அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மறுபடியும் காலேஜ் படிக்கும்போது கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

 ரசிகர்கள் மனதில்

ரசிகர்கள் மனதில்

சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் அதுவும் பள்ளி கல்லூரி இளைஞர்கள் மனதில் ஒரு இடத்தையும் பிடித்து விட்டார். இந்த சீரியலில் இவரது நண்பர்களாக நடித்திருக்கும் அனைவருமே இன்று பெரிய ஸ்டார்கள் ஆக மாறி இருக்கும் போதும் இவர்கள் அதே பழைய நட்பு இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 சின்சியர் காதல்

சின்சியர் காதல்

அந்த சீரியலில் இவர்கள் நடிக்கவில்லை நாங்கள் எல்லாரும் ஒன்றாக நண்பர்களாக தான் வாழ்ந்தோம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல இவர் இந்த சீரியலுக்கு பிறகு ஒருவரை ரொம்பவும் சின்சியராக காதலித்தார் ஆம் .அது இப்போது பிரேக்கப் இல் முடிந்துவிட்டாலும் இவரது காதலை இவர் மறக்கவில்லையாம். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.

 மாஜி காதலனைத் தேடி

மாஜி காதலனைத் தேடி

சென்னையில் எல்லா இடங்களும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவர் அவரைக் காணாது பல இடங்களில் தேடி அவரது பிரண்ட்ஸ் கூட அவரை தேடாத நிலையிலும் இவர் அவரை தேடி சென்று அவர் பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருப்பதை அறிந்து தான் நிம்மதியாக இருந்தாலும் அந்த அளவிற்கு அவர் மீது உண்மையான பாசத்தை வைத்திருந்திருக்கிறார்.

 மறுபடியும் காதலிப்பேன்

மறுபடியும் காதலிப்பேன்

ஆனால் அது இப்போது பழைய கதை ஆகிவிட்டாலும் தன்னுடைய வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று அசால்டாக கூறியிருக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரஷ்யாவின் தங்கையாக நடித்து இருப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார்.

 நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த சீரியலில் உண்மையாகவே இவர்கள் இருவரும் அக்கா தங்கச்சி போலவும் பெஸ்ட் பிரெண்ட் போல தான் பழைய கொண்டிருக்கிறார்களாம். இவருக்கு ஓர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி உடம்பு சரியில்லாத நேரத்தில் கூட இந்த டீம் இவருக்காக காத்துக்கொண்டு இவர் இருந்த இடத்தில் வேறு யாரையும் போடாமல் இவருக்கும் முழு சப்போர்ட் பண்ணி கொண்டு இருந்தார்களாம். ஆகவே இன்று வரையிலும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் .

 முறை வைத்து அன்பு

முறை வைத்து அன்பு

அந்த சீரியலில் நடிக்கும் எல்லோரையும் அவர் அந்த சீரியலில் என்ன முறை சொல்லி அழைப்பார்ரே அதே முறையைத்தான் அழைத்துக்கொண்டு ஃபேமிலி ஆக இருக்கிறார்களாம். தற்போது இணையதளங்களில் அதிகமாக கவனத்தை செலுத்தி வரும் இவர் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்ற இவருடைய போட்டோஸ் களுக்கும் வீடியோஸ் களுக்கும் ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள்.

 மாடர்ன் டிரஸ்ஸும் போடுவோம்

மாடர்ன் டிரஸ்ஸும் போடுவோம்

இவரை இதுநாள் வரையிலும் பாவாடை தாவணியில் பார்த்து வந்த ரசிகர்கள் இணையதளத்தில் இவர் மாடல் உடையில் படு கவர்ச்சியாக போட்டிருக்கும் போஸ்டர்களை பார்த்து ரசிகர்கள் சிலர் இவ்வளவு பெரிய பொண்ணா என்று வசனங்களையும் போட்டிருக்கிறார்கள். ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் அஷ்ரிதா அமர்க்களப்படுத்தி விடுகிறார்.. அதனாலேயே இவரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+