Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதர்வா படத்திற்கு வந்த சோதனை.. தியேட்டரில் ரிலீஸ் ஆன 24 மணி நேரத்தில் ஓடிடியில் ஒளிபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான "டிஎன்ஏ"( DNA) திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் இப்போது ஓடிடிக்கு வர இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே சென்றது, இந்த படத்திற்கு முக்கிய பலமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் டப் செய்து நாளை "மை பேபி" என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது.

Atharvaa Nimisha Sajayan

ஆனால் தெலுங்கு படத்திற்கு தான் இப்போது புது பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஓடிடி அறிவிப்பு இப்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிஎன்ஏ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனால் தெலுங்கு மக்கள் யாரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முன்வர மாட்டார்கள்.

ஏனென்றால் இந்த படம் தியேட்டரில் வெளியாகி 24 மணி நேரத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் படத்தின் தெலுங்கு வசூல் பயங்கரமாக பாதிக்கப்படும். இது பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படம் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. ஆனால் ஓடிடி விஷயத்தை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுங்கவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி வருகிறார்.

2013ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதையும் வாங்கி இருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இமைக்கா நொடிகள், இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்கள் எல்லாம் இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு இருக்கும்.

அதிலும் முதல் திரைப்படத்தில் நடிகை சமந்தாவோடு தான் இவர் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பாணா காத்தாடி திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவருடைய தந்தை முரளியும் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் முரளி திடீரென மாரடைப்பால் இறந்து போயிருந்தார். தன்னுடைய மகன் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வளர வேண்டும் என்று ஆசையோடு இருந்த முரளிக்கு அதர்வாவின் வளர்ச்சியை பார்ப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+