அவதார் 3 போஸ்டரே மிரட்டலா இருக்கே! ரிலீஸ் தேதியோடு வெளியான அப்டேட்
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய கவனத்தை ஈர்த்த அவதார் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இப்போது மூன்றாவது பாகம் எப்போது வெளியாக இருக்கிறது அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அறியப்படும் ஜேம்ஸ் கேமரூன், ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் இவரது படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. டைட்டானிக் திரைப்படம் ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தது, பின்னர் அவதார் அந்த இடத்தை பிடித்தது. தற்போது வரை அவதார் திரைப்படமே அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

அவதார் படம் முதல் பாகம்
அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதன் கதை பண்டோரா என்ற இடத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்ற நினைப்பதையும், அங்கு வசிக்கும் நாவி இன மக்களிடம் பேசி அவர்களை வெளியேற்ற ஹீரோ அனுப்பப்படுவதையும் பற்றியது. ஆனால், ஹீரோ அந்த மக்களில் ஒருவராக மாறி கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்துப் போராடுகிறார். இந்த கதையை ஜேம்ஸ் கேமரூன் கையாண்ட விதம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. இதுவரை பார்த்திராத ஒரு உலகத்தை அவர் கண்முன் நிறுத்தினார்.
இரண்டாவது பாகம்
அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தண்ணீரில் கதை நடப்பது போல் காட்சிப்படுத்தியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் Avatar: Fire and Ash நெருப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்காக உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ட்ரைலர்
சமீபத்தில், Avatar: Fire and Ash திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதார் வரிசையில் இது மூன்றாவது பாகம் ஆகும். இன்னும் இரண்டு பாகங்கள் வெளிவர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ் தேதி
2022-ல் வெளிவந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான 'Avatar: The Way of Water' மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதைத் தொடர்ந்து இப்போது வெளிவர இருக்கும் 'Fire and Ash' படத்தின் ட்ரெய்லரை திரையில் பார்க்கும் வாய்ப்பு முதன்முறையாக ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது. எனவே, மார்வெல் மற்றும் அவதார் ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளுக்கு படையெடுக்கும் வாய்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications