அயலி திரைப்படத்தில் நடித்த நடிகை விஜியின் மகள்.. இப்படி ஒரு நடிப்புக்கு பின்புலம் இவங்க தானா?
அயலி வெப் சீரிஸில் மைதிலி கேரக்டரில் நடித்த லவ்வின் சந்திரசேகர் நடித்திருந்தார்.
சென்னை: ஜி 5 ஓடிடியில் வெளியான அயலி திரைப்படத்தில் மைதிலி கேரக்டரில் நடிகை லவ்வின் சந்திரசேகர் நடித்திருப்பார்.
நடிகை சந்திரசேகர் லவ்வின் சந்திரசேகர் சின்னதிரை, வெள்ளி திரையில் நடித்த நடிகை விஜி சந்திரசேகரின் மகள் தானாம்.
அயலி வெப் சீரிஸில் இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் வெளிநாட்டில் படித்து வந்த லவ்லின் சந்திரசேகர் இந்த திரைப்படத்தில் கிராமத்து கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சமீபத்தில் g5 ஓடிடியில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 1990 காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை இந்த சீரிஸ் தத்ரூபமாக காட்டிதாக, தொடர்ந்து இந்த சீரியஸ்க்கு அதிகமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. தற்போது கூட உதயநிதி ஸ்டாலின் இந்த சீரியஸுக்காக இயக்குனருக்கு பெரியார் சிலை கொடுத்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த சீரிஸில் நடித்த நடிகர்கள் பலரும் சிறப்பாக நடித்ததாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

அயலி பட மைதிலி
இந்த வெப் சீரிஸில் நடித்த நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்த நிலையில், இந்த வெப் சீரிஸில் மைதிலி கேரக்டரில் நடித்த லவ்லின் சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் இந்த திரைப்படத்தில் தான் நடிக்கும் போது என்ன மாதிரி உணர்வு ஏற்பட்டது என்றும் அந்த கேரக்டரில் தான் எந்த அளவிற்கு விரும்பி நடித்தேன் என்பதை பற்றியும் பேசி இருக்கிறார். லவ்லின் வேற யாரும் இல்லை நடிகை விஜி சந்திரசேகரின் மகள் தான். அதுமட்டுமல்லாமல் நடிகை விஜி சந்திரசேகர் நடிகை சரிதாவின் தங்கச்சி தான் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

சாணி அள்ளும் காட்சி
இந்த நிலையில் லவ்லின் சந்திரசேகர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில், மாடலிங்கில் தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக பல போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மூலமாகத்தான் இவருக்கு இந்த வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் கதைகள் கேட்டதும் இவர் உடனே ஓகே என்று சொல்லிவிட்டாராம். இந்த வெப்சீரிஸ் இந்த அளவிற்கு ரசிகர்களோடு தனக்கு கனெக்ட் ஆகிவிடும் என்று இவர் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றாலும், இந்த வெப் சீரிஸ்காக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். நடிக்கும் போது இவருக்கு ஒன்றுமே தெரியாமல் தான் இருந்திருக்கிறது. வெளிநாட்டில் படித்தவருக்கு அந்த வெப் சீரிஸில் இவர் சாணி அள்ளுவது மிகவும் கஷ்டமாக இல்லை ஆனால் அவருடைய அம்மா நடிகை விஜி இதை பார்த்து ஆச்சரியப்பட்டாராம்.

எதார்த்தமான நடிப்பு
முதல் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு மற்றும் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இவரை மேலும் நடிப்பதற்கு தூண்டுகோலாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இதற்கு முன்பு நடிகை விஜி ஏதாவது அவார்டு ஃபங்ஷனுக்கு சென்றால் கூட அங்கே துணைக்கு வா என்று கூப்பிட்டால் லவ்லின் போக மாட்டாராம். அதுவெல்லாம் வேண்டாம் என்று கூறி விடுவாராம். தற்போது இந்த திரைப்படத்தில் எப்படி இப்படி எல்லாம் நடித்தார் என்று என்பதுதான் தனக்கு வியப்பாக இருக்கிறது என்று விஜி கூறி இருக்கிறார். திரைப்படத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அம்மாவின் விருப்பத்திற்காகவும் திருமணத்தை செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவர் இறந்த நிலையில் என்ன மாதிரி ஒரு பெண் படும் கஷ்டங்களை அதை அப்படியே கண் முன்பு இந்த மைதிலி கேரக்டரில் நடிகை லவ்லின் கொண்டு வந்திருந்தார். அதை இப்போ வரைக்கும் ரசிகர்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications