திருமண புகைப்படங்களை வெளியிட்ட ஆயிஷா.. மாப்பிள்ளை இவரா? அப்போ விஷயம் இதுதானா?
சென்னை: சீரியல் நடிகை ஆயிஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பயன்படுத்தி இருக்கிறார். அவரோடு மாப்பிள்ளையாக தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் கிருஷ்ணா இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆயிஷா அதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார். அந்த சீரியலில் ஆண் போல முடியை கட்டையாக வெட்டிக்கொண்டு எப்போதும் ஃபேன்ட் சட்டையில் தான் சுற்றி கொண்டு இருப்பார்.

சத்யா சீரியலில் ஆயிஷாவிற்கு ஜோடியாக நடிகர் விஷ்ணு தான் நடித்திருந்தார். இருவருக்கும் நல்ல காம்பினேஷன் ஏற்பட்டது. அதனாலேயே இந்த சீரியல் சில வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில் தான் ஆயிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இவரும் இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ஆயிஷா லோகேஷ் என்பவரை காதலிப்பதாகவும், அவரோடு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து விட்டது என்றும் சில புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் ஆயிஷா நீக்கிவிட்டார். அது குறித்து எந்த பேட்டிகளிலும் விளக்கம் கொடுக்கவில்லை.
அதற்கு பிறகு அவருடைய காதலரோடு எந்த புகைப்படங்களையும் ஆயிஷா போஸ்ட் போடவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சீரியஸில் சின்மயி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சிவா கேரக்டரில் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார்.

நடிகர் கிருஷ்ணா வேறு யாரும் இல்லை தெய்வமகள் சீரியல் மூலம் பெரிய அளவில் பிரகாஷ் கேரக்டரில் பிரபலமடைந்தவர்தான். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலிலும் முக்கிய கேரக்டரில் கிருஷ்ணா நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை சாயா சிங்கை தான் காதலிச்சு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் உப்பு புளி காரம் வெப்சீரிஸில் சின்மயி மற்றும் சிவாவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படத்தை ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்து விட்டதா? என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் இது நிஜக் கல்யாணம் அல்ல, இது சீரியல் கல்யாணம்தான் என்பதை குறிக்கும் வகையில் ஆயிஷா தன்னுடைய புகைப்படங்களுக்கு கீழே "சின்மயி மற்றும் சிவா" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications