Ayudha Ezhuthu Serial: கலெக்டர் டிராமா கலைஞ்சு போச்சு...! மனோஜ்க்கு எப்படி?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் ஒரு பொறுப்புள்ள சப்கலெக்டர் இந்திரா பற்றிய கதையை சொல்வதாக இருக்கிறது. ஆனால், அந்த பொறுப்பை எப்போதும் காண்பிக்காமல் அவ்வப்போது காண்பிக்கிறார்கள்.
காளி அம்மா அந்த ஊரில் படிக்காத கலெக்டர். அவங்க சொல்றதைத்தான் மக்கள் கேட்பார்கள். அதோடு காளி அம்மாள் என்றாலே மக்களுக்கு பயம். அதனால அவங்க இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.
ஊரில் பள்ளி கூடம் நடக்கலை.. யாரும்படிக்க கூடாதுன்னு காளி அம்மாவின் கட்டளை. அதனால், பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கிட்டு போயிருவாங்க

பள்ளியை திறக்க
ஊரை மாத்தி பள்ளியைத் திறக்க சப் கலெக்டர் இந்திரா வீடு வீடா போயி, பசங்களை பள்ளிக்கு அனுப்புங்கன்னு கேட்டும் அனுப்ப மாட்டேன்னு அடம் புடிக்கறாங்க. காளி அம்மாவின் கணவர் மனைவியின் இந்த செயலால் அவளை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். கடைசி பையன் சக்தி மட்டும் அப்பபாவை அடிக்கடி வந்து பார்த்துட்டு போவான்.

இந்திரா சக்தி
காளி அம்மாவின் கடைசி பையன் சக்தி.இவனுடன் இந்திராவுக்கு நட்பாகி அவனுடன் பழக ஆரம்பித்து விடுகிறாள். ஆனால், காளி அம்மாவின் இளைய மகன் என்று தெரியாமல் இவளும் பழக, சக்தியும், தனது அப்பாவுடன் சேர்ந்து தான் காளி அம்மாவின் மகன் என்பதை மறைத்து அவளுடன் பழகறான்.

மனோஜ் இந்திரா
இந்திராவுடன் படிச்ச மனோஜ், தன்னை காதலிப்பதாக டார்ச்சர் செய்கிறான் என்று சக்தியின் அப்பாவிடம் சொல்லி,, சலிச்சுக்கிட்டு மனோஜின் போனை அட்டென்ட் செய்யாமல் இருக்கிறாள்.இதை சாக்காக வச்சு, கல்யாணம் இங்கே முடிவாயிருச்சுன்னு சொல்லுங்கலேன்னு சொல்றார் அப்பா.

மாப்பிள்ளை யாரு
மாப்பிள்ளை யாருன்னு கேட்டால் என்ன சொல்றதுன்னு இந்திரா கேட்க, சக்தின்னு சொல்லுங்கன்னு சொல்லித் தர்றார். அப்புறம் என்ன ரெண்டு பேரும் காதல் நாடகம் ஆட, அதை வீட்டாரும் அனுமதிச்சு பார்க்கறாங்க. கடைசியில் மனோஜை வெறுப்பேத்தறதா ரெண்டு பேரும் நாடகம் போடற மாதிரி காதலிக்கிற நிலைமைக்கு வந்துடறாங்க.
கடைசியில் உங்க டிராமாவை நான் கண்டு பிடிச்சுட்டேன்னு எல்லாரையும் வரவழைச்சு ஒரு இடத்தில் மீட்டிங் போட்டு அசால்ட்டா உங்க டிராமாவை கண்டு பிடிச்சுட்டேன்னு சொல்லிட்டு போறான் மனோஜ்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications