Ayudha ezhuthu serial: ஒரு சப் கலெக்டருக்கு காளி அம்மா மகன் தெரியாதா?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திரா. இவங்க அந்த கிராமத்தில் இருக்கும் காளி அம்மாவின் அதிகாரப் போக்கை கண்டிக்க நினைக்கறாங்க.
காலி அம்மாவா நடிகை மவுனிகா நடிக்கறாங்க. இவங்க கெட்டப் ரொம்ப நல்லாருக்கு. சேரில் உட்கார்ந்து கால்களை வைக்க ஒரு குட்டி ஸ்டூல் என்று பார்க்கவே வித்தியாசமா இருக்கு..
காளிஅம்மாவின் புடவை கட்டு,நெற்றியில் பெரிய பொட்டு, பெரிய கொண்டை என்று சின்னத் திரையிலும் மெனக்கெட்டு கெட்டப் போட்டு அசத்துவது நன்றாக இருக்கிறது.

சப் கலெக்டர் குடும்பம்
இந்திரா குடும்பம் ஊரில் இருந்து வருவதை மறந்து வேலைகளில் இந்திரா ஈடுபட்டு கொண்டு இருக்க, அவர்களை ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வருகிறான் சக்திவேல். இந்திரா மிகவும் மகிழ்ந்து போகிறாள்.மறந்தே போயிட்டேன் சக்தி...ஆமாம் எப்படி உங்களுக்கு என் அப்பா அம்மா வர்றது தெரியும்னு கேட்கறா. இல்லை... நீங்கள் போனில் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டேன்.. அதான்னு சக்தி இழுக்க, அப்போ நான் பேசினதை ஓட்டு கேட்டீங்க இது தப்பு இல்லையான்னு இந்திரா கேட்கறாங்க. நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவும் தப்பில்லீங்கன்னு சக்தி கமல் டயலாக் விட சிரிக்கிறாள் இந்திரா.

நல்லா படிச்சவர்
காளி அம்மாவின் இளைய மகன் சக்திவேல்னு ஊருக்கு வந்து பல நாட்களாகியும் இந்திராவுக்கு தெரியவில்லை.ஆனால், ஜீப்பை வைத்துக் கொண்டு நின்ற சக்தியிடம் முதலில்பேசி,என்னை ஊருக்குள்ள அழைச்சுகிட்டு போங்கன்னு சொல்லும்போது இருவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிடறாங்க.சக்தி யார்னு வீட்டில் வேலை செய்யும் நபரிடம் கேட்கிறாள் இந்திரா.அவன் சக்தியின் நண்பன்.சும்மா அவன் இஷ்டத்துக்கு சக்தி லண்டன் ரிட்டர்ன்..ரொம்ப படிச்சு இருக்கான்.கிராமத்து வாழ்க்கையை விட விரும்பாத சக்தி கிராமத்துக்கே வந்து செட்டில் ஆகிட்டான்னு சொல்றாங்க.

காளி அம்மா பசங்களுடன்
சக்தியை காளி அம்மா பசங்களுடன் பார்த்துவிட்டு, கூப்பிட்டு அனுப்புகிறாள் இந்திரா. உன்னை காளி அம்மா பசங்ககூட பார்த்தேன். அவங்க கூட உனக்கு என்ன வேலைன்னு இந்திரா கேட்க, நான் எப்போதும் அவங் வீட்டில்தான் இருப்பேன். அவங்கப்பிள்ளை மாதிரி என்னை வளர்த்தாங்க.அதுக்கு நன்றி கடனா அவங்க வீட்டில்தான் இருப்பேன்.ஆனா,அவங்க செய்யற கெட்ட விஷயத்துல என்னை சம்பந்த படுத்த மாட்டாங்க ஆனா,நான் அவங்க தப்பு செய்தா யாருக்கும் தெரியாம போலீசுக்கு ஸ்பை மாதிரி இருக்கேன்னு சக்தி சொல்ல அதையும் நம்பிடறா இந்திரா.

ஒருத்தர் இப்படி
சரிதான் சக்தி, ஒருத்தர் இப்படி இருந்தால்தான் போலீஸ் என்னை மாதிரி அதிகாரிங்களுக்கு உதவியா இருக்கும். பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ.சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கோன்னு எச்சரிக்கறா இந்திரா.அது மட்டுமல்ல இந்திரா குடும்பத்துக்கே சக்தியை பிடிச்சுப் போகுது.இந்திராவும் சக்தியை சொல்லாமல் காதலிக்க ஆரம்பிக்கறா.சக்தியும் இந்திராவை காதலிக்க ஆரம்பிச்சு இருக்கான்.
இந்த லட்சணத்துல இன்னும் காளி அம்மா மகன்தான் சக்தின்னு சப் கலெக்டர் இந்திராவுக்கு தெரியாதது ஆச்சரியமே. அவன் எது சொன்னாலும் இந்திரா நம்பறாங்க...!












Click it and Unblock the Notifications