Ayudha Ezhuthu Serial: அம்மா அப்படி... பிள்ளை இப்படி... அப்பா? அடங்கொப்பா....!
சென்னை: குடுமபத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்கப்பான்னு சொல்லிக்குவாங்க. அப்புறம் சொல்லுவாங்க அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்காதுன்னு.
அப்படித்தாங்க இருக்குது இந்த பய புள்ள சக்தியோட குடும்பம். அதான் உங்க விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியல் சக்திவேல் இல்லே... அவன் குடும்பம்.
அம்மா காளி அம்மா சொர்ணாக்கா மாதிரி.அப்பா இது பிடிக்காம தனியா வாழறார். சக்தி இந்த தம்பதிக்கு கடைசி பிள்ளை.

அப்பா சக்தி
சக்திக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும்...வீட்டுக்கு வந்துருப்பான்னு சக்தி கூப்பிட, நிறுத்த சொல்லு உன் அம்மாவை எல்லாத்தையும் நிறுத்த சொல்லுன்னு நாயகன் கமல்ஹாசன் டயலாக் பேசி, அப்போ நான் வரேன்னு சொல்றார். என்னப்பா நீ அம்மாவை நான் எதாவது சொல்ல முடியுமான்னு கேட்கிறான்.

இந்திரா காளி அம்மா
இந்த ஊருக்கு சப் கலெக்டராக வந்திருக்கும் இந்திராவுக்கு எதிராக காளி அம்மா நிறைய வேலைகள் செய்யறாங்க.அவங்க கட்டுப்பாட்டில்தான் ஊரே இருக்கணும்னு விரும்பறவங்க.யாருமே அந்த ஊரில் படிக்க கூடாது. அதனால், பள்ளிக் கூடத்துக்கு பூட்டு போட்டுட்டாங்க. அந்த பூட்டை உடைத்தவள் சப்கலெக்டர் இந்திராதான். இப்படி இவர்கள் இருவரும் எதிரி.

இந்திரா சக்தி
இந்திரா இந்த ஊருக்கு சப் கலெக்டரா வந்த நாளிலேயே இருவரும் நட்பாகி விட்டார்கள். பின்னாளில் காதலர்களாகவும் ஆகிவிட, சக்தி காளி அம்மாவின் பிள்ளை என்பதை அவனும் மறைத்து விடுகிறான். தனது அப்பாவை மட்டுமே இந்திராவிடம் அறிமுகப்படுத்துகிறான். இப்ப கல்யாணத்துக்கு நிச்சயதார்த்தமும் நடந்தாச்சு.

உண்மையை இந்திராவிடம்
இந்தியாவிடம் ஒரு பயங்கரமான உண்மையை சொல்லப் போகிறேன் என்று சக்தி உட்கார, உடனே மூக்கில் வியர்த்த மாதிரி வந்துடறார் அப்பா. அங்கிள் என்னவோ பயங்கரமான உண்மையை சொல்லப் போறேன்னு சொன்னான்னு இந்திரா சொல்ல, இல்லைம்மா அவன் பண்ணிய திருட்டு வேலைகளைப் பற்றி சொல்ல நினைச்சு இருப்பான்னு சொல்றார் அப்பா.

திருட்டா என்னது?
என்ன திருட்டு வேலைன்னு கேட்க, பள்ளிக் கூடத்துல படிக்கும்போது மாங்காய் திருடறது, பனங்கிழங்கு திருடறதுன்னு இதுதான்மா.. அதைத்தான் இவன் உன்கிட்டே சொல்ல வந்திருப்பான்னு சொல்ல, இவ்வளவுதானான்னு இந்திரா கூலாகிறாள். தகப்பா என்னோட கிரிமினல் ரேட்டை கூட்டிகிட்டே போறியேப்பான்னு சக்தி பார்க்க, ஒரு கொலை செய்தாலும், ஒன்பது கொலை செய்தாலும் தண்டனை ஒண்ணுதாம்ப்பான்னு சொல்றார் அப்பா.
தகப்பா அடங்கொப்பா.. நல்ல டயலாக் இது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications