மாறி மாறி முத்தமழை.. உங்களுக்கே இது ஓவரா தெரியலையா? அய்யனார் துணை சீரியல் அலப்பறை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் ப்ரோமோ இப்போ சோசியல் மீடியாவில் பல சிங்கிள்ஸை கொதிக்க வைத்து இருக்கிறது. என்னங்க இப்படி பண்ணுறீங்களே என்று சிலர் நொந்து கொள்கின்றனர். இன்னும் ஒரு சிலர் சீரியலுக்கெல்லாம் வரைமுறையே கிடையாதா? என்று விமர்சித்து வருகின்றனர். அப்படி என்னதான் நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் கதையை பார்த்தால் இந்த சீரியலில் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நான்கு ஆண்கள் இருக்கும் வீட்டில் எந்த பொண்ணுமே தங்கவில்லை. அவங்களோட அம்மா எங்க போனாங்கன்னு தெரியாததால் யாருமே இவங்களுக்கு பொண்ணு கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் தான் சோழன் நிலா வீட்டுக்கு கார் ஓட்ட போக அங்கு கடைசியில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிலாவை திருமணம் செய்து கொண்டு வந்து விடுகிறார்.

அய்யனார் துணை சீரியல் கதை
ஆனால் அது பொய் கல்யாணம் தான். கடைசியில் சோழன் தன்னை காதலிக்கும் விஷயத்தை தெரிந்து நிலா அவரை மனதார ஏற்றுக்கொண்டு கல்யாணமும் பண்ணி இருக்கிறார். இப்போது இந்த குடும்பத்தின் மூத்த அண்ணனான சேரனுக்கு கல்யாணம் நடக்கப்போகிறது. அதுவும் சேரன் ஒரு வேறு மாநிலத்து பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறார்.
போராட்ட கல்யாணம்
பல போராட்டத்துக்குப் பிறகு இப்போ அந்த பெண்ணின் சொந்த ஊருக்கே சென்று திருமண ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்யாணத்தில் சண்டைகள், அழுகாட்சி காட்சிகள் எல்லாம் நடந்தது. ஒரு வழியா இப்போ சேரனுக்கு கல்யாணம் நடக்கப்போகிறது. இது குறித்த ப்ரோமோ தான் இப்போ இணையத்தில் வெளியானது.

முத்த காட்சி
அதில் சேரன் அவருடைய வருங்கால மனைவி சந்தாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, உங்க வீட்ல எல்லாருடைய சம்மதத்துடன் நம்ம கல்யாணம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலப்பா என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, சந்தா சேரனை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். உடனே சேரனும் அவருக்கு முத்தம் கொடுக்க, அந்த சமயத்தில் அங்கு வந்த நிலா இதை பார்த்து சங்கடப்பட்டு வெளியே வருகிறார்.
பிறகு நிலா அவருடைய கணவரான சோழனிடம் நான் சேரன் அண்ணேன் முத்தம் கொடுப்பதை பாத்துட்டேன் சோழா.. என்று சொல்ல, சோழன் அண்ணே எப்படி முத்தம் கொடுத்தாங்க? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நிலா டக்குனு முத்தம் கொடுத்து விடுகிறார். இதை சோழனின் அடுத்த தம்பியான பல்லவன் பார்த்து விடுகிறார். அப்போது பல்லவன் மட்டும் இதை பார்த்து நெழிந்து கொண்டிருக்கவில்லை பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒரு விதமான சங்கடம் தான் ஏற்படுகிறது.

ரசிகர்கள் கருத்து
காரணம் இந்த சீரியலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சேர்ந்து பார்க்கிறார்கள். இந்த சீரியல் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் இருக்கிறது. ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக இருக்கிறது அதில் இப்போது இதுபோன்ற காட்சிகள் வரத் தொடங்கிவிட்டது. இதுவரைக்கும் இதுபோன்ற ரொமான்ஸ் கட்சிகள் இந்த சீரியலில் வரவில்லை என்றாலும் இப்போதுதானே கல்யாணம் முடிந்து இருக்கிறது இனி இப்படித்தான் வருமா என்றும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
என்னையா பண்ணி வச்சிருக்கீங்க? சிறகடிக்க ஆசை சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வாடை அடிக்குதே! அதே கதையா?
இதுவரைக்கும் இந்த சீரியல் ட்ரோல் ஆனது கிடையாது. ஆனால் இப்போ முத்த காட்சிகளை நெத்தி செந்தில் பிடித்து விட்டனர். ஏற்கனவே சிங்கிள்ஸ் பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது எங்க கண்ணு முன்னாடியே இப்படியா போட்டு காட்சிகளை போட்டு வெறுப்பேத்துவீங்க என்று சிலர் கமெண்ட்ஸ்களில் குமுறி இருக்கிறார்கள். அதிலும் சிலருக்கு இன்னொரு பயமும் வருகிறது. இப்போ கல்யாண ஏற்பாடு தான் நடக்கிறது இப்பவே இப்படி முத்த காட்சிகள் என்றால், அடுத்ததாக கல்யாணம் முடிந்ததும் ஃபர்ஸ்ட் நைட் காட்சிகள் வேற ப்ரோமோவா போடுவீங்களா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
