Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அய்யனார் துணை ஏப்ரல் 15 எபிசோடு: நிலா எடுத்த உருப்படியான முடிவு.. ரசிகர்கள் ஆசை நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் நிலாவை வீட்டிற்குள் அடைத்து வைப்பதற்காக குடும்பத்தினர் எடுத்த முயற்சியில் இருந்து நிலா அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

அய்யனார் துணை சீரியலில் இன்று எபிசோட் ஆரம்பத்தில் தன்னுடைய சர்டிபிகேட்டை வாங்குவதற்காக நிலா திருவண்ணாமலையில் இருக்கும் தன் அப்பா வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நிலாவை புரிந்து கொள்ளாமல் இந்த வீட்டிலேயே எங்களோடு இருந்து விடு, உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

ayyanar thunai serial vijay tv

நிலா சபதம்

அதற்கு நிலா சம்மதிக்காததால் அவருடைய கண் முன்னே சர்டிபிகேட்டை எரித்து சாம்பலாக்குகின்றனர். இதனால் கோபத்தில் இருக்கும் நிலா இனி உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை இனி நான் உங்களை நினைத்து எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக மாட்டேன் சர்டிபிகேட் இல்லனாலும் என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று சவால் விட்டுவிட்டு பல்லவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வருகிறார்.

பல்லவன் அழுகை

பிறகு நிலாக்கு என்ன ஆச்சு என தெரியாமல் பல்லவன் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும்போது நிலா அழுது கொண்டிருக்கிறார். நிலாவை பார்த்து அவனை அறியாமலே பல்லவனும் அழ அதை பார்த்த நிலா பல்லவனை சமாதானம் செய்து இனி நான் அழமாட்டேன் என்று கூறுகிறார். பிறகு தான் சின்ன வயதிலிருந்து வீட்டில் வளர்க்கப்பட்ட விதம் தன்னுடைய கனவுகள் எதுவும் நிறைவேறாமல் வீட்டுக்குள்ளே அடைக்கப்பட்டு இருந்த விஷயத்தையும் கூறுகிறார்.

உண்மை மறைப்பு

அந்த சமயத்தில் பாண்டியன் போன் செய்து நிலாவை பற்றி விசாரிக்கிறார். அதோடு சென்னைக்கு வர கார் புக்கிங் செய்யவா என்று கேட்கிறார். பிறகு அவர் பேசி முடித்ததும் சோழன் நிலாவுக்கு போன் செய்து விசாரிக்கிறார். ஆனால் நிலா வீட்டில் நடந்த விஷயம் எதையும் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை.

பல்லவன் ஆறுதல்

அதோடு தன்னுடைய அப்பா அம்மா அண்ணன் இனி யாருமே எனக்கு இல்லை வாழ்க்கையில் முன்னேறி இவர்கள் முன்பு இவர்களெல்லாம் என்னை பார்த்து பெருமைப்படும் நிலைக்கு வந்த பிறகுதான் திருவண்ணாமலைக்கு வருவேன் இது அந்த ஈஸ்வரன் மீது சத்தியம் என்று நிலா பேச அதைக் கேட்டு பல்லவன் உங்களுக்கு இனி யாரும் இல்லைன்னு வருத்தப்படாதீங்க உங்களுக்காக நாங்க எல்லாம் இருக்கிறோம் உங்களுக்காக என்ன வேணாலும் செய்வோம் என்று ஆறுதல் கூறுகிறார்.

நிலா பதிலடி

பிறகு இருவரும் சாப்பிட்டு விட்டு ஹோட்டலை விட்டு வெளியே வரும் சமயத்தில் நிலாவிற்கு சூரியா அங்கு வந்து நின்று பிரச்சனை செய்கிறார். அப்போது நிலா நான் இன்னொருத்தனோட பொண்டாட்டி அப்படி இருந்தும் நீ இப்போ என் பின்னாடி சுத்திட்டு இருக்கேனா உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? என்று அசிங்கப்படுத்துகிறார். அதற்கு பிறகும் சூர்யா பேசிக் கொண்டே இருக்க கோபமான நிலா நீ இப்போ இங்கிருந்து போகலனா நீ என்னை ஈவ்டீசிங் செய்ததாக போலீஸில் சொல்ல போறேன் என்று சொன்னதும் அங்கிருந்து போய் விடுகிறார்.

சோழன் கவனிப்பு

பிறகு சென்னை வந்த பல்லவனையும் நிலாவையும் அழைத்து செல்வதற்காக சோழன் காரை எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது நிலாவை மட்டும் கவனித்துக் கொண்டே இருக்க, பல்லவன் இருப்பதையே சோழன் மறந்து போய்விடுகிறார். இதனால் சோழன் பல்லவனை முறைத்து பார்த்தபடி நிற்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+