அய்யனார் துணை: நிலாவிடம் சேரன் சொன்ன உண்மை.. பயத்தில் சோழன்.. பரபரப்பான தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் மார்ச் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் ரிசப்ஷன் நடப்பதை பார்த்து நிலா கோபப்பட்டு பிரச்சனை செய்கிறார் அதற்கு சேரன் தன்னுடைய குடும்பத்தை பற்றிய உண்மையை சொல்கிறார்.

விஜய் டிவியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆரம்பத்தில் 8:30 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது இப்போது அந்த சீரியலுக்கு பதிலாக தான் அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறது. இந்த சீரியலில் விறுவிறுப்பான கதையில் புதிய திருப்பம் வந்திருக்கிறது.

ayyanar thunai serial vijay tv

புதிய சீரியல்

அதாவது கதாநாயகி நிலா தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த வீட்டிற்கு டிரைவராக வந்த சோழன் நிலாவை அங்கிருந்து காப்பாற்றி வெளியே கூட்டிட்டு போகும் போது குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார். அதனால் வேறு வழி இல்லாமல் இவர்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

பெண்களே இல்லை

இந்த திருமணம் பொம்மை கல்யாணம் தான் இது உண்மை கிடையாது என்று நிலா சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் நிலாவை பார்த்ததுமே சோழனுக்கு பிடித்து போய்விடுகிறது. சோழன் வீட்டில் சோழன் மற்றும் அவருடைய அண்ணன் தம்பிகள் அப்பா என ஐந்து ஆண்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் பெண் கொடுப்பதற்கு அந்த ஊரில் யாருமே சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.

அப்பா எடுத்த விபரீத முடிவு

ஒரு பெண் கூட இல்லாத வீட்டில் எப்படி எங்கள் வீட்டு பெண்ணை வாழ வைக்க முடியும் என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோழன் அம்மா இறப்பிற்கு பிறகு அந்த குடும்பத்திற்கு மூத்த அண்ணன் சேரன் தான் பெரிய தூணாக இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிப்பதற்கு முன்பு இரண்டாவது தம்பி, சோழன் திருமணம் செய்துவிட்டார்.

பொம்மை கல்யாணம்

ஆனாலும் அவருடைய குடும்பத்தினர் இந்த திருமணத்தை முழு மனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திருமணத்தை உண்மை என நம்பி அவமானப்பட்டு விட்டதாக நிலாவின் அப்பா தற்கொலை முயற்சி செய்கிறார். அவரை பார்க்க போன நிலா மற்றும் சோழனையும் அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் நிலா மீண்டும் சோழன் வீட்டிற்கே வந்திருக்கிறார்.

சண்டை போடும் நிலா

இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு ஊர் அறிய ரிசப்ஷன் நடத்த வேண்டும் என்று சோழனின் அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடு நடந்து இருக்கிறது. இந்த நிலையில் தான் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிலா, இந்த ரிசப்ஷன் யாரை கேட்டு ரெடி பண்ணுனீங்க என்று சோழனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இனி நிலா முடிவு

சோழன் ரிசப்ஷனுக்கு ரெடியாகி வந்து நிற்கும்போதும் நிலா மட்டும் ரெடியாகாமல் பிரச்சனை செய்து கொண்டிருப்பதை பார்த்து சேரன் நிலாவிடம் பேசுகிறார். அப்போது உன்னுடைய சூழ்நிலை எனக்கு புரியுதும்மா. இந்த வீட்டுக்கு ஊர்ல ஒரு பிரபலமான பேரு இருக்கு. இந்த வீட்டில பெண்களே தங்காத வீடு என்று சொல்லுவாங்க. வாசலில் ஒரு கூட்டம் இருக்காங்கல்ல... அவங்க எல்லாம் சந்தோஷமா உன்னை வாழ்த்த வந்திருக்காங்கன்னு நீ நெனச்சியா?

நெகிழ வைத்த சேரன்

இந்த வீட்ல எப்படிடா நல்லது நடக்கும்னு வேடிக்கை பார்ப்பதற்காக தான் வந்திருக்காங்க. எங்க வீட்டுக்கு வந்த பொண்ணு எங்கேயும் ஓடி போகல எங்க வீட்டுக்கே திரும்ப வந்துட்டாங்கன்னு ஊரு முழுக்க சொல்லணும்னு நினைச்சோம். அதுக்காகத்தான் இந்த ரிசப்ஷன் பண்ணி இருக்கிறோம். எனக்காக வாமா.. என்று சேரன் உருக்கமாக கூப்பிட நிலா என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து நடப்பது இதுதான்

இந்த ப்ரோமோவில் சேரனின் நடிப்பு பயங்கரமாக இருக்கிறது. பார்ப்பவர்களையே பாவம்டா இந்த பையன் என்று சொல்ல வைத்து விடுகிறது. சோழன் பல இடங்களில் சுயநலமாக யோசித்தாலும் குடும்பத்திற்கு நிலாவை கூட்டிக்கொண்டு வந்து ஏதோ உருப்படியான ஒரு செயலை செய்திருக்கிறார். ஏற்கனவே சேரனை அவருடைய மாமன் பொண்ணு காதலிக்கிறார். அவர் தன்னுடைய காதலை நேற்று வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு சேரன் எந்த பதிலையும் சொல்லவில்லை என்றாலும் இனி அடுத்ததாக சேரன் திருமணம் பற்றி தான் கதை நகரும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+