அய்யனார் துணை சீரியலின் "ரீல்” ஜோடிக்கு “நிஜ” எங்கேஜ்மென்ட்.. இப்பவே கலக்குறாங்களே! குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் "அய்யனார் துணை" தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து, குடும்ப ரசிகர்களின் மனதை முழுமையாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியலிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தை போலவே அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டுதான் கதை பயணிக்கிறது.

இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சல்மான் மற்றும் நடிகை ஆயிஷா நிஜ வாழ்க்கையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருப்பது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Ayyanar Thunai Serial vijay tv Tamil TV serial

அய்யனார் துணை

இது சீரியலின் கதைப்படி பொறுப்பில்லாத குடித்துக் கொண்டிருக்கும் அப்பாவின் நான்கு ஆண் மகன்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறார்கள் என்பது தான் கதை. இதில் மூத்த அண்ணன் சேரன் இந்த குடும்பத்தின் தியாகியாக இருக்கிறார். வழக்கமாக எல்லா சீரியலிலும் ஒரு தியாகி இருப்பார், இந்த சீரியலில் இவர் தான் வானத்தைப்போல விஜயகாந்த்.

சேரனுடைய இன்னொரு தம்பி சோழன், நிலா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஆனால் எதிர்பாராத சூழலில் சோழனுக்கும் நிலாவிற்கும் திடீர் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் நிலா இது சும்மா லுள்ளுலாயி கல்யாணம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் சோழன் வாயாலே வடை சுடுபவர், வாயை திறந்தாலே பொய் மட்டும் தான் வரும்.

அவரையும் நம்பி நிலா இந்த குடும்பத்திற்குள் வந்திருக்கிறார். ஆனால் இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் ரொம்ப நல்லவங்க என்று புரிந்து கொண்டு இப்போ இந்த குடும்பத்தில் ஒருத்தியாக மாறி இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிலாவை வெறுப்பேற்றுவதற்காக சோழன் காயத்ரி என்ற பெண்ணிடம் காதலை சொல்லி இருந்தார். அதை உண்மை என்று அந்த பெண்ணும் நம்பி இருந்தார்.

Ayyanar Thunai Serial vijay tv Tamil TV serial

கடைசியில் சோழனுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்த விஷயம் தெரிந்து அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டிருந்தது. பிறகு சோழன் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். கதை இப்படி போய்க்கொண்டிருக்க இப்போ இந்த சீரியலில் காயத்ரி ஆக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஆயிஷாவிற்கு தான் எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறதாம். மாப்பிள்ளையும் வேறு யாரும் இல்லை இதே சீரியலில் நடிப்பவர் தான் சல்மான். இவரைத்தான் ஆயிஷா எங்கேஜ்மென்ட் செய்திருக்கிறார்.

இருவருடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சீரியல் ஒன்றாக நடிக்க தொடங்கி இப்போ காதலர்களாக மாறி கல்யாணத்தில் இவர்களுடைய பந்தம் அடி எடுத்து வைத்திருக்கிறது. இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+