Azhagu Serial: அழகம்மையை மல்லிகா சொன்னபடி வச்சுருச்சு போலிருக்கே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையை வச்சுரலாமா சித்தின்னு மல்லிகா கேட்கும். அப்படீன்னா என்று சித்தி கேட்க.. புதை குழியில் வச்சுரலாமான்னு மல்லிகா மறுபடியும் சொல்லும்.
அது மாதிரியே அழகம்மைக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டு போச்சு. இப்போ கோமாவில் ஆஸ்பத்திரியில் இருக்காங்க அழகம்மை.
சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் அழகம்மையா நடிகை ரேவதி நடித்து வருகிறார்.இருந்தாலும், ரேவதி அடிக்கடி சீரியலில் வருவதில்லை என்பது ரசிகர்களின் குறை.

சுதாவா அழகுவா
சீரியலின் பெயர் அழகு என்று வைத்துவிட்டு, நீங்க அடிக்கடி காணாமல் போகிறீர்களே.. உங்கள் கதாபாத்திரத்தை விட சுதா கதாபாத்திரம்தானே முக்கியத்துவமா பார்க்கப்படுகிறது. பேசாமல் அழகு என்று பெயர் வைத்ததற்கு பதில் சுதா என்று பெயர் வைத்து இருக்கலாமோ என்று ரேவதியிடம் கேட்டபோது கூட ஆமாம் சுதான்னே வச்சு இருக்கலாம் என்று ஒற்றை வார்த்தை பதிலில் முடித்துக் கொண்டார் ரேவதி.

கமிட்மென்ட் ரேவதி
நடிகை ரேவதி இப்போதைக்கு எந்த கமிட்மெண்டும் இல்லாமல் அழகு சீரியல் மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு ஏற்ற வெயிட்டான கதாபாத்திரம்தான் அழகு சீரியலில் ரேவதிக்கு என்றாலும், அவரை அடிக்கடி கூப்பிட்டு நடிக்க வைக்கும் அளவுக்கு பெரிய பட்ஜெட் சீரியல் இல்லை அழகு சீரியல் என்பதே உண்மை.

அடிக்கடி இல்லை
சீரியலில் அடிக்கடி அழகம்மை கதாபாத்திரம் அங்கே போயிருக்காங்க.. இங்கே போயிருக்காங்க என்றுதான் இருக்கும்,. இந்த நிலையில், கதையும் சப்பென்று போகிறது. புது கதாபாத்திரங்கள் என்ட்ரி கதையை வேறு திசைக்கு பயணிக்க வைத்து சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.

அழகம்மை விபத்து
சீரியலின் கதை இப்படி போகிற நேரத்தில் அழகம்மைக்கு விபத்து நேர்ந்து, அவருக்கு கோமா நிலை என்று டாக்டர் சொல்கிறார். பழனிச்சாமி வாத்தியார் கதாபாத்திரத்துக்கும் உடம்பு சரியில்லை என்று கதையை கொண்டு போகிறார்கள். இனி யாரும் ரேவதி எங்கே என்று கேள்வி கேட்க மாட்டார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications