ஒரு வழியா அசீம் எதிர்பார்த்தது நடந்து விட்டது..ஆனால் இப்போது வேறாக இருக்கிறது.. பாராட்டும் ரசிகர்கள்
பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அசீம் அவருடைய மகனோடு கலந்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் தன்னுடைய மகனோடு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
விஜய் டிவியில் விரைவில் வெளியாக இருக்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக அசீம் தன்னுடைய மகனோடு கலந்து கொண்டிருக்கிறார்.
அசீமுடைய மகன் ரயானுடன் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

பிக் பாஸ் கொண்டாட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனுக்கான பிக் பாஸ் கொண்டாட்டம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான சூட்டிங் வேலைகள் முடிவடைந்த நிலையில் சூட்டிங்கில் கலந்து கொண்ட பலர் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பதவி வருகிறது. அதில் இந்த சீசன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் அவருடைய மகனோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நிறைவேறாத ஆசை
இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. அசீம் டைட்டில் ஜெயித்தது சமூக வலைதளத்தில் இப்போதும் அதிகமான ரசிகர்களாலும் போட்டியாளர்களாலும் பேசப்படும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி தனக்கு கவலையே இல்லை என்று பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி, வெளியேயும் சரி இருந்து வரும் அசீம் தற்போது தன்னுடைய மகனோடு தன்னுடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தன்னுடைய மகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அசீம் அதிகமாக தன்னுடைய ஆசையை கூறிக் கொண்டிருந்தார்.

நினைத்தது நடந்து விட்டது
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீமுடைய மகன் ஃபிரீஸ் டாஸ்க்கில் கலந்து கொள்ளவில்லை. இது அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டத்தில் தன்னுடைய மகனோடு அசீம் கலந்து கொண்டிருக்கிறார். அசீமுடைய மகனோடு அசல், ராம், ஏடிகே என பலரும் புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர். தற்போது வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அசீம் தன்னுடைய மகனை பற்றி அதிகமாக பெருமையாகவும், தன்னுடைய பாசத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார். தற்போது அவர் நினைத்தது நடந்து விட்டது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் மற்றும் அசீமுடைய ரசிகர்கள் இருவரும் கருத்து மோதல்களில் அடிக்கடி ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டத்தில் அசீம் மற்றும் விக்ரமன் இருவருமே கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று பலர் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். ஒரு சிலர் இவர்கள் இருவரும் நேரில் பார்க்கும் போது என்ன மாதிரி எக்ஸ்பிரஷன் காட்டப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சிக்காக வெய்டிங்கில் இருப்பதாக கருத்துக் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications