விக்ரமன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்ட அசீம்.. கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட்.. இப்படி சொல்லிவிட்டாரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஃப்ரீஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்று விக்ரமனின் பெற்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விக்ரமனின் பெற்றோரிடம் அசீம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அசீமிடம் விக்ரமனின் பெற்றோர் யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறி இருக்கின்றனர்.

விக்ரமனின் பெற்றோர் வருகை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 81 வது நாளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இரு தினங்களாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். இன்று அந்த வகையில் விக்ரமனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமனின் பெற்றோர் வந்ததும் அனைவரும் வழக்கம்போல விக்ரமனின் பெற்றோரிடம் வெளியே என்ன மாதிரி தங்களுடைய பெயர் மற்றும் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக சுற்றிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

மன்னிப்பு கேட்ட அசீம்
அனைவரிடமும் சகஜமாகவும் அதே நேரத்தில் பிக் பாஸ் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாகவும் விக்ரமனின் பெற்றோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அசீம் விக்ரமனின் பெற்றோரிடம் வெளியே எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என தெரியாது. ஆனால் எங்கள் இருவருக்கும் பல நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் டாஸ்க் தான். வேறு ஒன்றும் இல்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று அசீம் கூற அதற்கு அப்படியெல்லாம் இல்லை நீங்கள் விளையாட்டை விளையாட்டாக விளையாடுகிறீர்கள் அதில் தவறு ஒன்றும் இல்லை என்று விக்ரமனின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.

விக்ரமன் அப்பாவின் பதில்
அது மட்டுமல்லாமல் டைனில் சேரில் அனைவரும் சுற்றி இருந்து இருக்கும் போது விக்ரமனின் அப்பா எங்கள் வீட்டில் விக்ரமன் அவருடைய தங்கையும் இருக்கின்றனர். விக்ரமன் ரொம்பவே அமைதியான டைப் ஆனால் அவருடைய தங்கை ரொம்ப ஜாலியான டைப் எப்போதும் துருதுருவென இருப்பார். ஒரே வீட்டுக்குள்ளே இப்படி வேற்றுமை என்றால் இங்கே பலர் பல இடங்களில் இருந்து வந்திருப்பதால் அப்படித்தான் இருக்கும் என்று பொது மறையாக கூறிக் கொண்டிருக்கிறார்.

பொதுப்படையான வார்த்தை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குகாக வெளியே விக்ரமன் மற்றும் அசீம்க்காக இருதரப்பு ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அசீமின் நடவடிக்கைகளுக்கு விக்கிரமனின் தந்தை அளித்த பதில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. விக்ரமனின் தந்தை பேசும் பல விஷயங்கள் விக்ரமனின் கருத்து போலவே இருப்பதால் போட்டியாளர்கள் அனைவருமே விக்ரமனின் இந்த பேச்சு எங்கிருந்து வந்தது என்பது இப்போது புரிந்து கொண்டது என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மைனா நந்தினி, விக்ரமனின் தந்தையிடம் வெளியே இங்கே யார் சரியாக விளையாடுகிறார்கள் உங்களுக்கு யாரைப் பிடித்து இருக்கிறது என்று கேட்க நீங்க எல்லோருமே சிறப்பாக விளையாடுறீங்க என்று பொதுப்படையாக பேசி முடிக்கிறார் ஆனால் இடையில் அசின் இடம் நீங்கள் நல்லாவே கவுண்டர் கொடுக்குறீங்க என்று கூறுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications