Abuse என்றால் என்ன? அசீம் அப்யூசர் என்றால் விக்ரமனும் அப்யூசர் தான்.. தனலட்சுமி கொடுத்த விளக்கம்!
அசீமிற்க்கு ஆதரவாக முதல் முறையாக தனலட்சுமி அசீம், அப்யூசர் என்றால் விக்ரமனும் என்னிடம் அப்படித்தான் நடந்து கொண்டார் என்று கூறியிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி தன்னை அசீம் அப்யூஸ் செய்தாரா என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அசீம் தன்னிடம் தவறான நோக்கத்தில் விளையாடவில்லை என்று தனலட்சுமி கூறி இருக்கிறார்.
அசீமை அதிகமானோர் அப்யூஸர் என்று கூறுவதால் அவர் அப்யூஸர் என்றால் விக்ரமனும் அப்படித்தான் என்று தனலட்சுமி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

ஆதரவும் எதிர்ப்பும்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆன நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றி போட்டியாளர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் இந்த நிகழ்ச்சிக்குள் இவர்கள் செய்த செயல்கள் சமூக வலைத்தளத்தில் இப்பவும் ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் அசீமிற்க்கு டைட்டில் கொடுத்தது தவறு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அசீம் உடைய ரசிகர்கள் பலர் அசீமிற்க்கு இப்போதும் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

அசீம் கேள்வி
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசீம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். அவர்களின் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் என்று அவரை அபியூசர் அசீம் என்று கூறி வருகின்றனர். அதிகமான ரசிகர்களும் பிக் பாஸ் ஆக போட்டியாளர்களும் அசீம் குறித்து கூறுவது பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமியை அவர் தவறான இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அதற்கு அசீம் தான் முதன்முதலாக கொடுத்த பேட்டியின் போது தனலட்சுமிக்கு போன் செய்து தான் உன்னை தவறான நோக்கத்தில் தொட்டேனா தங்கச்சி என்று கேள்வி கேட்க, அதற்கு தனலட்சுமி இல்லை அண்ணா என்று பதிலளித்து இருந்தார்.

தனலட்சுமியின் விளக்கம்
தற்போது இவர்கள் இருவரும் ரசிகர்களோடு ஃபேன்ஸ் மீட்டிங் வைத்திருக்கின்றனர். அப்போது தனலட்சுமி அப்யூஸ் என்றால் என்ன? அப்யூஸ் என்பது ஒரு பெண்ணை தவறான நோக்கத்தில் தொடுவது. தான் வெளியே சொல்லக்கூட தயங்கும் வகையில் ஒருவர் நடந்து கொள்வதுதானே? ஆனால் அசீம் என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் என்னிடம் தவறான நோக்கத்தில் என்னை தொடவில்லை. அவர் விளையாட்டில் என்னை பிடித்து தள்ளினார். அது அப்போது எனக்கு தப்பாக தெரிந்தது ஆனால் அது அப்யூஸ் கிடையாது என்று கூறி இருக்கிறார்.

விக்ரமன் மீது குற்றச்சாட்டு
அதுமட்டுமல்லாமல் அசீம் அப்யூசர் என்றால் விக்ரமனும் அப்யூசர் தான். ஏன் என்றால் விளையாட்டில் அசீம் என்னிடம் தவறான நடந்து கொள்ளவில்லை ஆனால் அது அவருக்கு தவறான பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. அதுபோல விக்ரமனும் என்னிடம் டாஸ்க்கில் அப்படித்தான் விளையாடினார். டாஸ்க்கில் என்னுடைய காலை வளைத்து பிடித்துக் கொண்டார். அப்போ அதுவும் அப்யூஸ் தானா? என்னுடைய டிரஸ்ஸை இழுத்து விளையாடியவருடைய ஆதரவாக விக்ரமன் நின்றார். அசீம் என்னிடம் விளையாடும் போது எனக்கு கோவம் வந்துச்சு, ஏன்னா அவர் கோபத்தில் என்னை தள்ளினார் அதனால் அவர் மீது கோபம் வந்தது. ஆனால் அவர் அப்யூஸ் பண்ண வில்லை என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications