Azhagu Serial: சீரியல்களில் பொம்பளை மனசு வேற மாதிரிதாங்க!
சென்னை: நிஜ வாழ்வில் பெண்கள் செய்ய துணியாத எதையும் சீரியல்களில் மிக சர்வ சாதாரணமாக செய்து விடுகிறார்கள். பெண்ணை தெய்வமாக மதிக்கும் இந்த சமூகத்தில் சீரியல்களில் பெண்களை மதிப்பதே இல்லை.
பிராண்டட் மாதிரி சீரியல்களுக்கு பெண் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது காலம் காலமான வழக்கமாகி வருகிறது. ஆனால், கதாநாயகியைத் தவிர அனைத்து பெண்களையும் அநியாயமாக காண்பிக்கிறார்கள்.
வயிற்றில் இல்லாத குழந்தைக்கு ஒரு அப்பாவி கணவன் அழகு குத்திக்கறது, அன்னதானம் இடுவது என்று அமர்க்கள படுத்துகிறான். பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

மகேஷ் பூர்ணா
சன் டிவியின் அழகு சீரியலில் புருஷன் மகேஷைத் தவிர அவளை பெத்த அம்மா, அப்பா கூட அவளது கிரிமினல் வேலைகளை புரிந்துக் கொண்டு விட்டார்கள். ஆனால், புருஷன் மகேஷிடம் மட்டும் தான் நல்லவள் என்பது போல நாடகமாடி அவனை நம்ப வைத்து வருகிறாள் பூர்ணா. அவனும் ஒரு கட்டத்தில் இவளது கிரிமினல் வேலைகளை தெரிந்துக் கொள்ளும் சூழல் வர, அந்த நேரம் பார்த்து தான் கர்ப்பம் என்பது போல நடித்து அவனை மாற்றி விடுகிறாள் பூர்ணா.

மகேஷ் வீக்னஸ்
மகேஷ் வீக்னஸ் என்றால் அது குழந்தைதான்.தான் கர்ப்பமாக இருப்பதாக டாக்டரிடம் போய் சான்றிதழ் கொடுக்க சொல்லி, தான் தாய்மை அடைந்து இருப்பதாக சொல்ல சொல்கிறாள். அது உண்மை என்று நம்பி, மகேஷ் அப்படியே மாறி விடுகிறான். பூர்ணா மீது மறுபடியும் ஆசையாக இருக்கிறன்.

குழந்தை இல்லை
இல்லாத குழந்தைக்கு அலகு குத்துவதாக வேண்டிக்கொண்டு, கோயிலுக்கு பூர்ணாவை அழைத்துச் சென்று நாக்கில் அழகு குத்தி, முட்டி போட்டபடி மகேஷ் கோயிலை சுற்றி வருகிறான். அப்போதும் பூர்ணா உண்மையை சொல்லாமல் மவுனமாகவே இருக்கிறாள்.

அன்னதானம் கோயிலில்
கோயிலில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பூர்ணாவிடம் வந்து சந்தோஷமாக சொல்கிறான். பூர்ண கர்ப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டு இருக்கும், அவளின் அப்பா பூர்ணா எப்படி இதை எல்லாம் சமாளிக்கிறாள் என்று வெறுப்பாக பார்க்கிறார். அப்போதும் பூர்ண உண்மையை செல்லாதபடி கதை போகிறது.
நிஜமா இப்படிப்பட்ட பெண்களை சீரியல்களில் மட்டும்தான் பார்க்க முடியும். தாராளமாக பார்த்து மகிழுங்கள், நீங்களும் பெண்தான் என்கிற உணர்வு இல்லாமலே!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications