Baakiyalakshmi: பாக்கியலட்சுமி 2 சீரியல் எப்போது? மீண்டும் கோபிக்கு வெயிட்டிங்.. நடிகர் சதீஷ் கொடுத்த அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்த நடிகர் சதீஷ் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பலரும் பாக்கியலட்சுமி 2 சீரியல் எப்போது சார் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஜாலியாக சதீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலை அவ்வளவு சீக்கிரமாக சின்னத்திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த சீரியலை பார்க்காதவர்கள் கூட இந்த சீரியல் காட்சியை ட்ரோலில் பார்த்திருப்பார்கள். அடிக்கடி ட்ரோலிங் சிக்கிக் கொண்டிருந்த இந்த சீரியல் 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பானது. அதிலும் இந்த சீரியலில் குழந்தையாக நடித்த நேகா பிறகு காலேஜ் முடித்து, கல்யாணம் முடித்தது போலவே சீரியலில் கொண்டு போய் இருந்தனர்.

அது மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலின் கதை முன்னேற வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் பெண்களுக்கு ஒரு உத்வேகம் கொடுப்பது போல இருந்தது. குடும்ப தலைவியாக இருந்த பாக்யா தன்னுடைய கணவர், மாமியார், பிள்ளைகளிடம் பல அவமானங்களை சந்தித்து, தன்னுடைய சொந்த காலில் தான் நிற்க வேண்டும் என்றும் சுயமரியாதை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுத்து வைத்த முயற்சிகள் பெண்களுக்கு மோட்டிவேஷன் கொடுப்பது போலவே இருந்தது.
அதனாலேயே இந்த சீரியல் முடிவடைந்ததும் பல பெண்கள் இந்த சீரியலின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகியாக சுசித்ரா நடித்திருந்தார். கோபி என்ற கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்திருந்தார். சதீஷ் இதற்கு முன்பு பல சீரியல்களின் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
ஆனால் சதீஷ் இருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் அவருடைய கோபி கேரக்டர் பெரிய அளவில் பெயர் வாங்கியது. இவருக்கு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதிகமான சப்போர்ட்டும் கிடைக்க தொடங்கி விட்டது. என்ன தான் இந்த சீரியலில் வில்லனாக கோபி இருந்தாலும் அவருடைய காமெடி மற்றும் ரியாக்ஷன் எல்லாம் வேற லெவல் என்று சொல்லும் வகையில் இருக்கும்.
அதனாலேயே விஜய் டிவியில் அவார்டு ஃபங்ஷனில் கோபிக்கு அவார்டு கொடுக்கலையே என்று கூட அந்த நேரத்தில் அதிகமானோர் குரல் எழுப்பி இருந்தனர். இப்படியான சூழலில் இந்த சீரியல் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. இந்த நிலையில் நேற்று சதீஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பாக்கியலட்சுமி சீரியல் தமிழில் மட்டுமல்ல பலமொழிகளிலும் ஒளிபரப்பானது. அந்த மொழிகளில் எல்லாம் கோபியின் கேரக்டர் இதுபோல கிடையாது. அவர்கள் முழுக்க முழுக்க வில்லனாக மட்டும் இருந்தார்கள். நானும் வில்லன் தான். ஆனால் கொஞ்சம் காமெடி செய்தேன், கொஞ்சம் ஏமாற்று வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தேன். கடைசியில் மனம் திருந்தியும் இருந்தேன். இதை மக்களும் ரசித்திருந்தார்கள்.
அதனாலேயே மக்கள் இப்போதும் என்னை கோபியாக பார்க்கிறார்கள். அந்த கோபி கேரக்டருக்கு பிறகு இனி அடுத்த கோபி கேரக்டர் எப்ப வரும்னு தெரியலையே...! எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான் என்று சொல்லி இருக்கிறார். அதிலும் வழக்கம் போல நான் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான்னு சொல்றது ஒரு பட காமெடி போல இருக்கிறதே என்று அவருடைய டிரேடு பார்வையை பார்த்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்ததும் அப்போது பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த பாகம் வரப்போகிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அடுத்த வீடியோவில் இது குறித்த விளக்கத்தை சதீஷ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications