அமிர்தா வாழ்க்கையை சீரழிக்க துணிந்து பாக்கியா கேட்ட கேள்வி.. செய்த பாவத்தால் பரிதாப நிலையில் கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் கணேசன் திரும்ப உயிரோடு வந்ததை பற்றி கணேசனின் அம்மா அப்பா பாக்கியாவிடம் சொல்ல பாக்யா கணேசனை பற்றி அமிர்தாவிடம் கேள்வி கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 16th of October 2023 promo and episode full update

அதே நேரத்தில் பண திமிரில் ஆட்டம் போட்ட கோபிக்கு இப்போ பண பிரச்சனை வந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கணேஷின் அப்பாவும் அம்மாவும் கணேஷ் மீண்டும் உயிரோடு வந்தது பற்றி சொல்ல பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சியாகிறார். கூடவே அவன் அமிர்தாவை எங்கேயோ பார்த்து இருக்கான் என்று சொல்ல, அதைக் கேட்டு பாக்கியா, அவருடைய போட்டோவை காண்பிக்க சொல்ல அதை பார்த்ததும் இவர் ரெண்டு நாளா எங்க வீட்டு கிட்ட சுத்திக்கிட்டு இருந்தாரு என்று சொல்ல கணேசனுடைய அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்க பிள்ளையும் முக்கியம், எழிலும் முக்கியம், அமிர்தாவும் முக்கியம். இந்த பிரச்சனைக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதனால் தான் உங்ககிட்ட சொன்னோம் என்று சொல்கின்றனர். அதற்கு பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 16th of October 2023 promo and episode full update

அதை தொடர்ந்து மறுபக்கத்தில் ராதிகா மயூவோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மயூ தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்கு வர தன்னுடைய அம்மாவுக்கு அறுபதாம் பிறந்தநாள் வருது, சப்ரைஸா அவங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும் என்று ராதிகா சொல்ல, அதற்கு கோபி ஹேண்ட் பேக் வாங்க வா? சின்னதா மோதிரம் வாங்கலாமா என்று கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு ராதிகா இல்ல இரண்டு பவுனில் நகை வாங்க வேண்டும்.

நீங்க இரண்டு லட்சம் பணத்தோட வந்துருங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியாகிறார். அதைத்தொடர்ந்து அவருக்கு இன்னொரு பேங்கில் இருந்து கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று போன் வர கோபி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் பாக்கியா கணேசனின் அம்மாவையும், அப்பாவையும் சந்தித்து அவர்கள் சொன்ன விஷயத்தை பற்றி யோசித்து கொண்டு இருக்க பிறகு அமிர்தாவிடம் இதைப் பற்றி பேசுகிறார்.

Baakiyalakshmi Serial 16th of October 2023 promo and episode full update

அப்போது கணேஷ் எப்படி இறந்தார் என்று பாக்யா விசாரிக்க அதற்கு அமிர்தா கணேஷ் ரொம்பவே நல்லவர்மா, ரொம்ப துரு துருன்னு இருப்பாரு. என் மேல பாசமா இருந்தாரு. அப்பா அம்மா மேலையும் ரொம்ப பாசமா இருந்தாரு, அவங்களுக்கும் வேற குழந்தைகள் இல்லை என்பதால் அவர்கள் மேல ரொம்ப பாசமா இருந்தாரு.

என்னை அவ்வளவு நல்லா பாத்துகிட்டாரு. நான் கொஞ்சம் கொஞ்சமா அந்த வீட்டோட சூழ்நிலைக்கு செட் ஆனேன். அந்த நேரத்தில் தான் அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிட்டு. ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல் இருக்கும்போது அதை கேட்டு நான் நொறுங்கி போயிட்டேன். கொஞ்சம் சந்தோஷமான ஒரு வாழ்க்கையில் இருந்துட்டு திடீர்னு அந்த வாழ்க்கை மொத்தமா இல்லனா எப்படி இருக்குமோ அந்த மாதிரி நிலைமையில் தான் நான் தவித்தேன் என்று அமிர்தா சொல்ல, இதையெல்லாம் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து ராமமூர்த்தி நிலா பாப்பாவே பார்க்குக்கு கூட்டிட்டு போவதாக சொல்ல பாக்கியா அதெல்லாம் வேண்டாம். எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலேயே விளையாடட்டும் என்று அவசரமாக சொல்ல அதைக் கேட்டு ஈஸ்வரி என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அதற்கு பாக்கியா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+