ஈஸ்வரி முடிவால் எதிர்த்து கேள்வி கேட்கும் பாக்யா.. கதறி அழும் ராதிகா.. பரபரப்பில் "பாக்கியலட்சுமி"
சென்னை: கோபியை தேடிக் கொண்டிருந்த ராதிகாவிற்கு கோபி பாக்யாவின் வீட்டில் இருக்கிறார் என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.
கோபி இனி நம்ம வீட்ல தான் இருக்க வேண்டும் என்று ஈஸ்வரி இறுதியாக முடிவு கூறுகிறார்.
கோபி இங்கே இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று பாக்கியா கேள்வி கேட்கிறார்.

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 17ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் செழியன் குடி போதையில் தடுமாறிய கோபியை தனது வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், பாக்கியா இனி என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக வருத்தத்தோடு உட்கார்ந்திருக்க ஜெனி அமிர்தாவும் ஆறுதல் கூறுகின்றனர்.
அப்போது அங்கு வரும் ராமமூர்த்தி நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு புரியுது என்று கூறி பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவன் இங்கே இருக்கட்டும் நாளைக்கு கிளம்பி போயிடுவான் என சொல்ல, பாக்கியா எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்கிறார். திரும்பவும் நீயா கோபியா என சூழ்நிலை வந்தால் நாங்க எல்லோரும் உன் பக்கம்தான் நிற்போம் என்று கூறுகிறார்.

அடுத்ததாக ராதிகா விடியற்காலை 3.30 வரைக்கும் தூங்காமல் நடந்து கொண்டே கோபியை எதிர்பார்த்து இருக்க, அவருடைய அம்மா தூக்கத்திலிருந்து எழுந்து வந்து ராதிகாவிற்க்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு மறுநாள் காலையிலும் ராதிகா கோபியை தேடிக்கொண்டு போன் பண்ணியப்படியே வெளியே வந்து பார்க்க அவருடைய கார் பாக்யாவின் வீட்டின் அருகில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
உடனே வீட்டிற்க்குள் சென்று ராதிகா அவ்வளவுதான் முடிஞ்சு போயிடுச்சு இது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துடுச்சு என்று அழுதபடியே அம்மாவிடம் கோபி பாக்யா வீட்டில் இருக்கும் விஷயத்தை சொல்ல, அவர் அது எப்படி உன்னை கல்யாணம் பண்ணிட்டு அங்க போக முடியும் அப்படியெல்லாம் போக முடியாது என்று கூறுகிறார்.
அதற்கு ராதிகா அதான் போயிட்டாரே, அவங்க அம்மா பேசும் போது இவர் அமைதியா இருக்கும்போது எனக்கு சந்தேகம் வந்தது. இப்போ கிளம்பி போயிட்டாரு. இனி நான் என்ன பண்றது என் வாழ்க்கை அவ்வளவுதான், என அழுது கொண்டிருக்க என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிக்கிட்டு அப்படியே விட்டுட்டு போனா நான் இதுக்கு ஒரு வழி பண்ணுகிறேன். நீ கவலைப்படாதே என்று ராதிகாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.
அடுத்த நாள் காலையில் செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் கோபியை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் எழில் இன்னும் எதுக்கு அவர வச்சுக்கிட்டு இருக்கீங்க. எழுப்பி அனுப்ப வேண்டியது தானே என சொல்ல, ஈஸ்வரி இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இனி கோபிஇங்கேதான் இருப்பான். பழைய கோபியா இங்கேதான் இருப்பான் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதற்கு ராமமூர்த்தி அவன் உன்கிட்ட சொன்னானா? என கேட்க, அவன் சொல்லுவான் நான் சொன்னா கண்டிப்பா கேட்பான். இனிமே இங்கேதான் இருப்பான் என சொல்ல கிச்சனிலிருந்து வெளியே வரும் பாக்கியா அப்ப நான் என்ன பண்ணனும் அத்த என்று கேட்கிறார். இனிமே அவர் இங்கேதான் இருப்பார்னா நான் என்ன பண்ணனும். அதையும் நீங்களே சொல்லிடுங்க. நான் இந்த வீட்டை விட்டு போகணுமா? என கேட்க, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications