சமையல் அறையில் பங்கு போடும் ராதிகா... பாக்கியா சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சியான இனியா
சென்னை: இனியா சரணை காபி ஷாப்பில் சந்திக்க போவதற்கு பாக்கியா கூடாது என்று மறுப்பு தெரிவிக்கிறார்.
ராதிகா சொன்னது போலவே நீங்களும் சொல்றீங்க என்று இனியா பதிலடி கொடுக்கிறார்.
ராதிகாவிற்கு சப்போட்டாக பாக்கியா பேசுகிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியா இரவு சோகமாக உட்கார்ந்து இருக்க, அப்போது ஜெனி ரூமில் படுத்து இருந்த இனியா எழுந்து வந்து பாக்யாவின் மடியில் படுத்து நீ ரொம்ப பாவம், ரொம்ப நல்ல அம்மா என வருத்தப்படுகிறார். அதற்கு பாக்கியா அதைப் பற்றி நீ கவலைப்படாமல் நல்லா படித்து வாழ்க்கையில் நல்ல இடத்துக்கு வரணும் என கூறுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அனைவரும் சூப்பர் என பாராட்ட அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் கோபி காபி வாசனை பிடித்து தனக்கும் காபி கிடைக்காதா என்று பார்க்கிறார். பிறகு இனியா டைனிங் டேபிளில் இருந்து சேட் செய்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த பாக்கியா பால் கொடுத்துவிட்டு ரொம்ப நேரமா யாருக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்க என்று கேட்கிறார்.
அதற்கு இனியா சரண் தான் டியூஷன் வரலைன்னு கேட்கிறான். போக வேண்டாம்னு இருக்கேன் என்று சொல்ல, ஏன் போகவில்லை? போக வேண்டியது தானே என்று பாக்கியாவும் எழிலும் கேட்கின்றனர். இன்னைக்கு வரலைன்னு சொல்லிட்டு அதான் பக்கத்தில் இருக்கிற ஸ்னாக்ஸ் கடைக்கு வர சொல்றான் என சொல்ல, அங்கெல்லாம் எதுக்கு போகணும் டியூஷன் போ அங்க பேசு வேணும்னா வீட்டுக்கு கூட்டிட்டு வா அதை விட்டுட்டு வெளியே எல்லாம் போகாத என பாக்கியா சொல்கிறார்.

அதற்கு இனியா என்னம்மா ராதிகாவும் அப்படித்தான் சொன்னாங்க. நீயும் இப்படி சொல்ற என சொல்ல, அவங்க இப்படி சொல்லி இருந்தா அது சரி தான் என பாக்கியா ராதிகாவிற்கு சப்போர்ட் செய்ய, இனியா ஷாக் ஆகிறார். பிறகு பாக்யா ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வேலை முடிந்ததும் நேரா வீட்டுக்கு தானே வருவ என கேட்க, இந்த வீட்டை விட்டு போக எவ்வளவோ சந்தர்ப்பம் கிடைத்தது ஆனால் அப்போதெல்லாம் போகாத நான், எதுக்கு இப்போ சந்தோஷம் தர நிறைய விஷயங்கள் இருக்கும்போது எங்கே போகப் போறேன். எங்கேயும் போகமாட்டேன் வீட்டுக்கு வந்து விடுவேன் அத்தை என்று கிளம்புகிறார்.

பிறகு கோபி ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் ராதிகாவை எழுப்ப முடியாமல் காபிக்காக புலம்பிய படியே இருக்க, அப்போது 9:30 மணிக்கு ராதிகா எழுந்து குளித்து தயாராகிவிட்டு கோபியிடம் பேச அவர் காபி குடிக்கணும் போல இருக்கு நான் ஆர்டர் பண்ணவா என கேட்கிறார். அதற்கு காபி எல்லாம் ஆர்டர் பண்றீங்க நான் போய் போட்டுட்டு வரேன் என்று ராதிகா சொல்கிறார்.
வேண்டாம் இதனால் ஏதாவது பிரச்சனை வந்தர போகுது என்று பயப்பட, இந்த வீட்ல தானே இனி இருக்க போறோம்னு முடிவு பண்ணியாச்சு. இனி என்ன நடந்தாலும் சமாளிச்சு தானே ஆகணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications