இனியாவால் ராதிகாவை திட்டும் எழில்..கதறி அழுத கோபி.. அதிர்ச்சியில் ஈஸ்வரி முடிவு..பரபரப்பான திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனியா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

இனியாவை திட்டியதற்காக எழில் ராதிகாவை கோபி முன்னிலையில் திட்டுகிறார்.

ராதிகா தன்னை அவமானம் செய்ததாக கோபியிடம் கோபப்பட்டு மருத்துவமனையில் இருந்து செல்கிறார்.

 பாக்யாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

பாக்யாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 3ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ராமமூர்த்தி பாக்யாவிற்கு ஃபோன் பண்ணி இனியா மாத்திரை சாப்பிட்ட விஷயத்தை சொல்ல, அவர் பதறி அடித்துக் கொண்டு எழிலை எழுப்பி விஷயத்தை சொல்லி இருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். வீட்டில் ஈஸ்வரி ஜெனி செழியனுக்கு இந்த விஷயம் தெரியாமல் தான் இருக்கிறது.

போட்டுக் கொடுத்த தாத்தா

போட்டுக் கொடுத்த தாத்தா

ஹாஸ்பிடல் வந்த பாக்கியா ராமமூர்த்தியிடம் இனியாவிற்கு என்ன ஆச்சு எப்படி இருக்கா என்று விசாரிக்க, ராமமூர்த்தி டாக்டர் உள்ள டிரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்கிறார். உடனே நான் அவளை பார்க்கணும் என பாக்கியா அடம்பிடிக்க இப்ப பார்க்க முடியாது கொஞ்சம் அமைதியா இரு என சமாதானம் செய்கிறார். எழில் என்னாச்சு என கேட்க ராமமூர்த்தி இவங்க ரெண்டு பேரும் திட்டுனாங்க அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டார் என்று சொல்ல, எழில் கோபி இடம் சண்டை போடுகிறார் என்று சொல்கிறார்.

ராதிகாவை

ராதிகாவை

அருகில் இருந்த ராதிகா அப்படி ஒன்னும் எதுவும் சொல்லல்ல. அவ தப்பு செஞ்சா அதை கண்டித்தோம் என சொல்ல, அவளை கண்டிக்க நீங்க யாரு என எழில் ராதிகாவை திட்டுகிறார். பிறகு டாக்டர் இரண்டு பேர் மட்டும் இனியாவை பாருங்க என்று சொல்ல, கோபி உள்ள போக ராதிகா மற்றும் பாக்கியா என இருவரும் உள்ளே போக முயற்சி செய்ய, ராமமூர்த்தி பாக்கியா போகட்டும் அவதான் பெத்தவ என சொல்ல ராதிகா வீ உள்ள போகிறார்.

கோபியை அலட்சியம் செய்யும் இனியா

கோபியை அலட்சியம் செய்யும் இனியா

பிறகு இருவரும் உள்ளே போன நிலையில் கோபி இனியாவிடம் பேச இனியா பதில் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொள்கிறார். அப்போது வந்த பாக்கியவுடன் இனியா அம்மா என பேசி கட்டி பிடித்துக் கொள்கிறார். எனக்கு எதுவும் ஆகாதுல அம்மா என்று இனியா கேட்க, இதுவும் ஆகாதுடா என்று ராதிகா ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். கோபி என்னென்னமோ பேச முயற்சி செய்ய இனியா எதுவும் கண்டு கொள்ளாமல் பாக்கியாவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

ராதிகாவை திட்டும் கோபி

ராதிகாவை திட்டும் கோபி

பாக்கியா இனியாவிற்கு முத்தம் கொடுத்து ஆறுதலாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி மன வருத்தத்துடன் வெளியே வருகிறார். வெளியே வந்ததும் நான் உங்க பின்னாடி உள்ளே வர முயற்சி பண்ணேன். ஆனா என்னை உள்ளே விடல. பாக்கியா எதற்காக உள்ளே வரணும் நான் சும்மா வீட்டில் இருக்கும்போது தானே இனியாவிற்கு இப்படி ஆகி இருக்கிறது. அப்ப நான் தானே உள்ளே வந்து பார்க்க வேண்டும் என்று ராதிகா வாக்குவாதம் செய்ய கோபி இப்படி எல்லாத்துக்கும் சண்டை போட்டு சண்டை போட்டு தான் இப்ப உள்ள வந்து படுத்து இருக்கா? இப்பவும் இப்படி பண்ணாத என்று பேச ராதிகா அதிர்ச்சி ஆகிறார்.

கோபத்தில் ராதிகா

கோபத்தில் ராதிகா

கோபத்தில் ராதிகா எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணமா? என்னால தான் நீங்க குடிக்கிறீங்க? என்னால தான் உங்க மகள் பல முயற்சி பண்ணுற அவ மட்டும்தான் மன அழுத்தத்தில் இருக்கிறாளா? நானும் தான் இருக்கிறேன். மயூ தான் இருக்கா. இந்த ராத்திரி இப்படி ஒரு ஹாஸ்பிடலில் வந்து படுத்து இருக்கணும்னு அவசியமா என்று வளவளவென்று கோபத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார். இதனால் கோபி வீட்டில் விட்டு வருவதாக சொல்கிறார்.

ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி

ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி

ராதிகா நான் உங்ககிட்ட கேள்வி கேட்கிறதால என்னை ஹாஸ்பிடல் விட்டு அனுப்ப பார்க்கிறீர்களா? நீங்களும் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட, அதற்கு கோபி நான் இங்கு கண்டிப்பா இருக்கணும். இனியா என் பொண்ணு என கூறுகிறார். பிறகு ராதிகா கோபத்தில் நானே போகிறேன் என்று மயூவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி பாக்யாவை தேட, அமிர்தா ஈஸ்வரி மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் இனியா ஹாஸ்பிடல் இருக்கும் விஷயத்தை சொல்ல ஈஸ்வரியும் செழியனும் பதறியபடி ஆஸ்பிட்டலுக்கு கிளம்பி வருகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+