பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு.. வீடியோ வெளியிட்டு மாட்டிக்கொள்ளும் பாக்கியா.. கோபத்தில் இனியா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவை மிரட்டி கொண்டிருந்த இனியாவிற்க்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கின்றது. இந்த நிலையில் இனியா கோபத்தில் இருக்கிறார்.

அதே நேரத்தில் பாக்கியா வீடியோ வெளியிட்டு ஈஸ்வரி இடம் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா பாக்யாவிடம் நீ காலேஜுக்கு வர வேண்டாம் என்று சொல்ல, நான் வருவேன் என்று பாக்யா சொன்னதற்கு நீ காலேஜுக்கு வர போற விஷயத்தை பாட்டி கிட்ட சொன்னா எப்படி வர முடியும்? நான் சொல்லட்டா? என்று கேட்க பாக்கியா, போ போய் சொல்லு என்று சொல்ல இனியா என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

பிறகு அங்கு வரும் ஈஸ்வரி எதுக்கு அம்மா கிட்ட கோபப்படுறா? இப்படி கோபப்படலாமா? தினமும் என் கூட வந்து தியானம் பண்ணு, என்று அட்வைஸ் பண்ணி இனியாவின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ண எழில் மற்றும் பாக்கியா இதை பார்த்து சிரிக்கின்றனர். இதனால் இனியா கோபப்படுகிறார்.
அடுத்ததாக எல்லோரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் இருக்கும் போது ஈஸ்வரி மதியம் காய்கறி சமைக்கும் படி சொல்ல, பாக்கியா சிக்கன் சமைத்து வைத்திருப்பதை சொல்ல, ஈஸ்வரி அசைவம் இனிமேல் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார். இதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சியடைய எழில் என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி நீங்க அசைவம் சாப்பிடுங்க. நான் காய்கறி தான் இனிமே சாப்பிடுவேன் என்று சொல்கிறார். எனக்கு நானே சமைச்சு சாப்பிடுகிறேன் என்று சொல்ல, எல்லாரும் அதைக் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். பிறகு எல்லோரும் ஹாலில் பேசிக் கொண்டிருக்கும்போது எழில் பாக்கியா youtube சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த வீடியோவை ஓடி வந்து காட்டுகிறார்.
அதில் பாக்யா ஈஸ்வரியை பற்றி பெருமையாக பேசியதோடு எங்க அத்தை என்னை காலேஜில் சேர்வதற்கு சம்மதிப்பாங்க என்று சொல்ல, அதை பார்த்த ஈஸ்வரி பாக்யாவை கூப்பிட்டு காலேஜ்லில் சேர்ந்து இருக்கியா? என்று கேட்க பாக்யா உடனே காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போல நடித்து உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் போகல அத்தை என்று சொல்ல, ஈஸ்வரி நீ போய் படிச்சு பெரிய ஆளாக வா என்று ஆசீர்வதிக்கிறார்.

பிறகு பாக்கியாவை பற்றி ஈஸ்வரி பெருமையாக பேசுவது போன்று வீடியோ ஒன்றை எழில் எடுக்க, இதை பார்த்து இனியா கடுப்பாகிறார். பாக்யாவும் எழிலும் இனியாவை மேலும் சிரித்து வெறுப்பேத்துகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications