பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் டும் டும் டும்..? பரிதாப நிலையில் இனியா.. ஈஸ்வரியின் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 14ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் பழனிச்சாமியின் அம்மா பழனிச்சாமி மற்றும் பாக்கியாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக முயற்சி எடுக்கிறார்.

அதற்கு பழனிச்சாமி எதிர்பார்க்காத பதிலை கூறியிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பழனிச்சாமி அறிமுகமாகும் போது இவர் பாக்கியாவிற்கு ஜோடியாக தான் இருக்கும் என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே பிற மொழிகளில் அதற்கான கதைக்களம் வந்த போதும் தமிழில் அப்படி ஒரு கதைக்களம் வராது என்று கூறப்பட்டது.
ஆனால தொடர்ச்சியாக பாக்கியாவும் பழனிச்சாமியும் நண்பர்களாக மாறி இருந்தனர். அது போல பாக்கியாவின் குடும்பத்தினரும் பழனிச்சாமியின் குடும்பத்தினரும் இப்போது ஒன்றாக குடும்பமாக மாறி இருக்கின்றனர். அதே நேரத்தில் பழனிச்சாமிக்கு பாக்கியாவின் மாமனார் ராம மூர்த்தியும் மாமியார் ஈஸ்வரியும் பொண்ணு பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதே நேரத்தில் கோபி, பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசி பழகுவதை பார்த்து கோபப்பட்டு பழனிச்சாமியின் அம்மாவிடமே சென்று பழனிச்சாமி என்னுடைய மனைவியிடம் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று கம்ப்ளைன்ட் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், பழனிச்சாமி இடம் அவருடைய அம்மா "உனக்குன்னு ஒரு பொண்ணு வேண்டாமாபா. நானும் இல்லனா உன்ன யாரு பாத்துக்குவாங்க..?" என்று கேட்கிறார்.
மேலும் நாம் பாக்கியா வீட்டுல போயி பேசட்டுமா? என்று கேட்க, என்ன பேச போறீங்க என்று பழனிச்சாமி கேட்கிறார். அதற்கு பாக்கியாவை உனக்கு பிடிச்சிருந்தா அவங்க வீட்டில் உங்க கல்யாணத்தை பத்தி பேசலாமே? என்று கேட்க அதற்கு பழனிச்சாமி அம்மா இப்படி ஒரு விஷயத்தை யோசிச்சு கூட பார்த்துவிடாதே, யார்கிட்டயும் பேசிறாத என்று கூற அதற்கு பழனிச்சாமி அம்மா நான் சொல்றதை கேளு பழனி என்று கெஞ்சுகிறார்.
அதற்கு பழனிச்சாமி நாங்க ரெண்டு பேரும் என்னைக்கும் நல்ல நண்பர்களாகவே இருந்துட்டு போறோமே என்று கூறுகிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் இது மட்டும் கோபிக்கு தெரிந்தால் ஹார்ட் அட்டாக் கன்பார்ம் என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர். அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் இதற்கு இனியா மற்றும் ஈஸ்வரி என்ன மாதிரி ரியாக்ட் செய்வாங்க என்றும் தங்களுடைய எதிர்பார்ப்புகளை கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஈஸ்வரி இப்பொழுது தான் கோவிலுக்கு சென்று வந்த பிறகு மனம் மாறி கோபத்தை குறைத்து பாக்கியாவை காலேஜுக்கு செல்வதற்கு சந்தோஷப்பட்டு அனுப்பி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன மாதிரியாக ரியாக்ட் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இது தெரிந்தால் இனியா மீண்டும் கோபியிடம் சென்று விடுவார் என்பது மட்டும் கன்பார்ம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications