பாக்கியா சொன்ன வார்த்தை.. கோபிக்கு தடபுடலாக விருந்து வைத்த பழனிசாமி.. கட்சி மாறும் இனியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கான எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் இதுவரைக்கும் பாக்கியா காலேஜுக்கு வருவது பிடிக்காமல் இருந்த இனியாவின் மனம் மாறுகிறது.

அதே நேரத்தில் பழனிச்சாமி வீட்டிற்கு சென்ற கோபி மீண்டும் பழனிசாமியின் அம்மாவிடம் பிரச்சனை செய்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோட்டில் ஆரம்பத்தில் பாக்கியா படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் பழனிச்சாமி முன்பு பாக்கியாவை கோபி மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டு போங்க. எப்படியும் நிறைய பேசுவீங்க. பேசிட்டு போங்க என்று திமிராக கைகட்டி கெத்தாக நிற்கிறார்.
அதற்கு பழனிச்சாமி மேடம் நீங்க உள்ளே போங்க என்று அனுப்பிவிட்டு கோபியிடம் பேசுகிறார். அப்போது இது பொது இடம் இங்கு நிறைய பேரு படிக்க வராங்க. நீங்க பேசும்போது சண்டை பெருசாகி போலீஸ் வந்தால் பாக்யா மேடம் உங்களை யாருனே தெரியாதுன்னு சொல்லிடுவாங்க. அதற்குப் பிறகு உங்களுக்கு தான் பிரச்சனை என்று சொல்ல, கோபி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக பாக்கியா பழனிச்சாமி இடம் அவரு எதுக்கு எப்போதும் சந்தோஷமா இருக்கியா? என்று கேட்டு என்னை தொந்தரவு செய்கிறார் என்று கேட்க, அவருக்கு உங்க மேல பொறாமை அதை எப்படி வெளி காட்டுவது என்று தெரியாமல் தான் இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்காரு என்று சொல்கிறார். அதற்கு பழனிச்சாமியும் பாக்யாவிற்கு ஆறுதல் கூறுகிறார்.
அடுத்ததாக பழனிச்சாமி வீட்டுக்கு கோபி மீண்டும் வந்து பழனிச்சாமியின் அம்மாவிடம் நான் உங்ககிட்ட சொன்ன விஷயத்தை பற்றி உங்க மகனை கண்டிச்சி வச்சீங்களா? என்று கேட்க, அவர் எதுக்கு அதை நான் செய்யணும். பாக்கியா தங்கமான பொண்ணு அவளை பழனிக்கு கட்டி வைக்கிறது எனக்கு ரொம்பவே சந்தோஷம். நான் இதைப்பற்றி முதலில் நினைக்கவே இல்லை. ஆனால் நீ வந்து சொன்ன பிறகு தான் இதைப் பற்றி யோசித்தேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் கோபி அதிர்ச்சி அடைந்து உங்களை போய் நல்ல அம்மா என்று நினைத்து வந்தேன் பாருங்க என்று திட்டிக்கொண்டு இது என்னோட விஷயம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்புகிறார். அப்போது பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விட கோபியை சாப்பிட சொல்கிறார் கோபிக்கு கறி விருந்து வைத்து பழனிச்சாமி உபசரிக்க கோபி கோபத்தில் அங்கு இருந்து கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக காலேஜில் பாக்கியா இனியாவின் பிரண்ட்ஸுடன் பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபி இனியாவை கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது காரில் போகும்போது உங்க அம்மா அங்க ரொம்ப சந்தோஷமா இருக்கா போல என்று கேட்க, ஆமாம். அவங்களுக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைத்து விட்டாங்க. அவங்க கனவை அவங்க நினைவாய்க்கிருவாங்க என்று சொல்ல, உனக்கு என்று ஒரு லைஃப் இருக்கு அதை யோசிக்காமல் அவள் பண்ணிக்கிட்டு இருக்கா உனக்கு ஒரு பிரச்சனை என்றால் வீட்டில் அம்மா தானே எடுத்து சொல்ல முடியும். ஆனால் கவலைப்படாத உனக்கு நான் இருக்கேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications