பாக்கியாவிடம் காதலை சொன்ன பழனிச்சாமி.. பரிதாப நிலையில் கோபி.. பாக்கியாவின் பதில்.. திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவிடம் பேசும் பழனிச்சாமியை பார்த்து கோபி இதயமே வெடிப்பது போன்று அதிர்ச்சியாகின்றார்.
இந்த நிலையில் என்ன நடந்தது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பாக்கியா கோபி மற்றும் ராதிகாவிடம் போடும் சவாலில் அடுத்தடுத்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்.
தன்னை அவமானப்படுத்துபவர்கள் முன்பு பாக்கியா செய்யும் சாதனை பாக்யாவை போலவே கஷ்டப்படும் பெண்கள் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கிறது. ஏற்கனவே கோபி, ராதிகாவும் வீட்டில் இருந்து பிரச்சனை செய்து கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு பணத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியே துரத்தி இருந்தார்.

அதுபோல தனக்கு இங்கிலீஷ் பேச தெரியவில்லை என்று ராதிகா கேண்டினில் அவமானப்படுத்தியதால் இங்கிலீஷ் கிளாசில் சேர்ந்திருந்தார். அது போல இப்போது காலேஜ் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கோபி அவமானப்படுத்தியதை தொடர்ந்து இப்போது கல்லூரியிலும் சேர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவை தேடி அவருடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு கோபி வருகிறார். வெளியே ரிசப்ஷனில் இருப்பவரிடம் பாக்கியலட்சுமி பற்றி விசாரித்துக் கொண்டு பாக்கியா இருக்கும் கிளாஸ்க்கு வருகிறார். அங்கே பாக்யா அனைவர் முன்பும் நின்று கொண்டு இருக்க பழனிச்சாமி பாக்யாவிடம் இங்கிலீஷில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பழனிச்சாமி பாக்கியாவிடம் "வாட் யூ டெல் யூ சம்திங்" என்று சொல்ல, அதற்கு பாக்கியா தலையாட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் பழனிச்சாமி," மேடம் டே ஒன் ஐ லைக் யு ஆர் தி ஸ்டார் மேடம்" என்று சொல்ல, கோபியை சுற்றி ஸ்டார்ஸ் விழுகிறது. "ஆல்வேஸ் யூ ஸ்மைலிங் க்யூட் ஐ.. லவ்... யூ" என்று சொல்ல கோபியின் இதயம் சுக்கு நூறாக உடைகிறது.
அதற்கு பாக்கியா பதில் எதுவும் சொல்லாமல் பழனிசாமியை பார்த்து லேசாக புன்னகைக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் பலரும் கோபியுடைய நடிப்பு மற்றும் ரியாக்ஷனை பார்த்து பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications