பழனிச்சாமி பற்றி ராதிகா சொன்ன வார்த்தை.. கதறி அழுத பாக்கியா.. கோபியின் வில்லத்தனம்..திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 21ஆம் தேதி எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவிட்டது.
அதில் பாக்யாவுக்கு சப்போர்ட்டாக பழனிச்சாமி வந்து நிற்பதை பார்த்து ராதிகா கோபியிடம் பற்ற வைக்கிறார்.

அதே நேரத்தில் பாக்கியா கதறி அழுது மன்னிப்பு கேட்டதை பார்த்து கோபி சந்தோஷம் அடைகிறார். ஆனால் கடைசியில் கோபிக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் ஒரு பைலை கொடுப்பதற்காக அவருடைய ஆபீசுக்கு வருகிறார். அப்போது பாக்யாவும் பழனிச்சாமியும் அங்கு நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவன் ஒரு இடம் விடாமல் இங்கேயும் வந்துட்டானா? என்று புலம்பிக்கொண்டு இருக்க அப்போது ராதிகா அங்கு வருகிறார்.

அப்போது ராதிகாவிடம் பாக்கியா என்ன ஆச்சு எதுக்காக இவன் இங்க வந்து இருக்கான் என்று கேட்க, அதற்கு ராதிகா கேண்டினில் சமையல் சொதப்பியத்தை பற்றி சொல்லவும் கோபி சந்தோஷப்படுகிறார். அதோடு எப்படியாவது அவகிட்ட இருந்து அந்த காண்ட்ராக்டை பறிக்கணும் என்று சொல்ல, ராதிகா அதுக்கு தான் நானும் கோடீஸ்வரன் சார் கிட்ட பேசப்போகிறேன் என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருக்க, அதற்கு பழனிச்சாமி அட்வைஸ் கொடுக்கிறார். நீங்க போய் அந்த சார் கிட்ட பேசுங்க. எல்லாமே சரியாயிடும் இவ்வளவு விஷயத்தை பார்த்தவங்க நீங்க இதுக்கெல்லாமா கவலைப்படுவீங்க என்று தைரியம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த ராதிகா மற்றும் கோபியை பார்த்து பழனிசாமி அவர்களிடம் போய் ராதிகாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு உங்களை பார்த்தது சந்தோஷம் என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு பழனிச்சாமி அங்கிருந்து போனதும் ராதிகா நீங்க சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்போ எனக்கும் சந்தேகம் வருது. இவங்களுக்குள்ள ஏதோ இருக்கு. அப்புறம் பாக்யாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே இவரு வந்து நிற்கிறார் என்று சொல்ல, அதை கேட்டு கோபி சந்தோஷப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து ராதிகாவும் பாக்கியாவும் கோடீஸ்வரனிடம் பேசுவதற்காக போகின்றனர். அப்போது பாக்யா தான் தெரியாமல் செய்து விட்டதாகவும் இனிமேல் இப்படி தவறு செய்யமாட்டேன் என்று சொல்ல, ராதிகா அதுதான் தப்பு நடந்துடுச்சு என்று
போட்டுக் கொடுக்கிறார். ஆனாலும் இதுதான் கடைசி. இதுக்கு மேல தப்பு நடக்கக்கூடாது என்று கோடீஸ்வரன் பாக்கியாவை மன்னித்து அனுப்பி விடுகிறார்.

இதனால் பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்லி உங்களால்தான் நான் போய் பேசினேன். இப்போ சரியாயிடுச்சு என்று சொல்லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். அதற்கு செல்வி தன்னுடைய கணவரால் வந்த பிரச்சனைகள்தான் நான் இப்படி செய்து விட்டேன் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து கோபி வீட்டில் மயூவுடன் விளையாடிக் கொண்டிருக்க அங்கு ராதிகா வருகிறார். அப்போது ராதிகாவிடம் என்ன ஆச்சு என்று கோபி கேட்க, ராதிகா நடந்ததை சொல்கிறார்.
அதற்கு கோபி அவ தடுமாற ஆரம்பிச்சுட்டா. ஒரு நாள் எல்லாத்தையும் இழந்து நிற்பா. அதை நாம கண்டிப்பா பார்க்க தான் போறோம் என்று வில்லத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications