குழந்தைக்காக அழும் எழில்.. விரக்தியில் பாக்கியா எடுத்த முடிவு.. வீட்டிற்கு வந்த பழனிச்சாமி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் இருபதாம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிவிட்டது.
அதில் நிலா பாப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அதை நினைத்து எழில் கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் பாக்கியா எடுத்த முக்கிய முடிவால் பழனிச்சாமி வீட்டிற்கே வந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் நிலாவுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் அமிர்தா குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருக்க சுற்றி பாக்யா ஈஸ்வரி என எல்லோரும் நிலாவின் உடல்நிலை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து உடல்நிலை சரியில்லை என்றால் குழந்தையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் பாக்யா நான் இங்கிலீஷ் வகுப்புக்கு இனி போக போவதில்லை என்று சொல்ல, அனைவரும் எதற்காக என்று கேட்க காலேஜ் மற்றும் இங்கிலீஷ் வகுப்பு ஒன்றாக படிப்பதால் வீட்டை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. ஏற்கனவே கேன்டீனில் சில தப்பு அடிக்கடி நடக்கிறது. அதை சரி பண்ணனும் என்று சொல்ல பாக்கியா எடுத்த முடிவு நல்லது தான் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு எழில் நிலாவை தூக்கி வைத்துக்கொண்டு கண்கலங்குகிறார். எப்படி ஓடி ஆடி திரிந்த பொண்ணு இப்போ இப்படி படுத்த படுக்கையா இருக்காளே என்று சொல்ல, அதற்கு அமிர்தா குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருக்கும். காய்ச்சல் வர தான் செய்யும் நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் பாக்யா இங்கிலீஷ் கிளாசுக்கு சென்று இனிமேல் நான் வரமாட்டேன். என்றும் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றும் கண்கலங்கி அழுதபடி சொல்ல, பழனிச்சாமி கவலைப்படாதீங்க நாங்க இருக்கிறோம். என்ன படித்தாலும் அதை உங்ககிட்ட சொல்லுவோம் நீங்க யோசிக்காதீங்க என்று சொல்லி ஆறுதல் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
பிறகு மாலையில் எல்லோரும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமியும் சோபிதாவும் உள்ளே வருகின்றனர். அவர்களை பார்த்ததும் பாக்கியா சந்தோசப்பட அப்போது சோபிதா இங்கிலீஷ் கிளாசில் அவர் எடுத்த நோட்சை பாக்யாவிடம் கொடுக்கிறார்.மறுபக்கம் பாக்யாவில் வீட்டு வாசலில் பழனிச்சாமியின் பைக் நிற்பதை பார்த்த கோபி அப்போ இந்த லேம்ப்போஸ்ட் இருக்கிறானா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு இனியா வந்ததும் அது பற்றி கேட்க, அதற்கு இனியா அம்மா இங்கிலீஷ் வகுப்புக்கு இனிமேல் போக மாட்டாங்க. அதுதான் பார்க்க வந்திருக்காங்க என்று சொல்ல, பாக்யா இனி இங்கிலீஷ் கிளாசுக்கு போக மாட்டாளா? என்று கோபி கேட்டு சந்தோஷம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications