இனியா சொன்ன வார்த்தை.. பாக்கியாவுடன் பிரச்சனைக்கு போகும் கோபி.. பழனிச்சாமி கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா காலேஜுக்கு போவதை தெரிந்து கொண்ட கோபி பாக்யா மீது கோபத்தில் இருக்கிறார்.

அதே நேரத்தில் பாக்யாவிடம் பிரச்சனை செய்ய வேண்டும் என்று இருந்த கோபி இனியாவிடம் பாக்யா எங்கே இருக்கிறார் என்று விசாரித்து பாக்யாவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போகிறார். அங்கே பழனிச்சாமி செய்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 2nd Episode full update

இந்த நிலையில் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது அமிர்தா,ஜெனி, எழில் மூவருடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செல்வி, பாக்யா வீட்டிற்கு வர எழில் பாக்யா காலேஜ் போகும் விஷயத்தைப் பற்றி சொல்லவும் செல்வி சந்தோஷப்படுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 2nd Episode full update

பிறகு செல்வி அப்போ இனி அக்கா கேண்டீனுக்கு வர மாட்டாங்களா? என்று கேட்க பாக்கியா அதெல்லாம் நான் வராமல் இருக்க மாட்டேன். கட்டாயமா வருவேன் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போகும் பாக்கியா பழனிச்சாமி மற்றும் லோபிகாவிடம் தான் காலேஜில் சேர்ந்த விஷயத்தை பற்றி சொல்ல பழனிச்சாமி சந்தோஷப்படுகிறார்.

அத்தோடு பாக்கியா நான் காலேஜுக்கு போவதற்கு நீங்கதான் காரணம் ரொம்ப நன்றி என்று பழனிச்சாமிக்கு நன்றி சொல்ல பழனிச்சாமி சர்ப்ரைஸ் ஆக கேக் வாங்கி வந்து அனைவரிடமும் பாக்கியா காலேஜ் போகப் போவதாக சொல்லி கேக் வெட்டி கொண்டாடுகிறார். அத்தோடு எல்லோரும் பாக்யாவை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 August 2nd Episode full update

அதே நேரத்தில் கோபி தன்னுடைய நண்பரிடம் பாக்கியா காலேஜுக்கு போகிறதை பற்றி சொல்லி பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இவ ஊரை சுத்திக்கிட்டு அந்த லேம்போஸ்ட் கூட எப்பவும் இருக்குறா என்று திட்டிக் கொண்டிருக்க, அதை கேட்டு கடுப்பான கோபியின் நண்பர் உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? அவங்க ஏதோ பண்ணிட்டு போறாங்க. நீ தான் அவங்க வேண்டான்னு விவாகரத்து பண்ணீட்டல்ல அப்புறம் அவங்க என்ன செஞ்சா உனக்கு என்ன என்று திட்டுகிறார்.

ஆனாலும் கோபி பாக்கியாவை திட்ட வேண்டும் என்பதற்காக இனியாவுக்கு போன் செய்து வீட்டில் இருப்பவர்களை பற்றி விசாரிப்பது போல பேசிக்கொண்டு பிறகு இனியா பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போய் இருப்பதை பற்றி சொல்ல, கோபி சரி என்று போனை வைத்ததும் பிறகு நான் நேரிலேயே போய் அவளை பார்த்துட்டு வரேன் என்று கிளம்பி அங்க போய் திட்டுவதற்காக வேகமாக கிளம்பி போகிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 2nd Episode full update

அதே நேரத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் மேம் ஏதாவது ஃபன்னாக பண்ணலாம் என்று ப்ரபோசல் டாஸ்கை வைக்கின்றனர். இப்போது பழனிச்சாமி லோபிகாவை அழைத்து ப்ரபோஸ் பண்ணுகிறார். அதைத்தொடர்ந்து பாக்யாவுக்கும் ப்ரபோஸ் பண்ண சொல்ல, முதலில் பாக்கியா நான் வரவில்லை என்று மறுத்துக் கொண்டிருக்க, பிறகு எல்லோரும் சொன்னதும் எழுந்து வந்து டாஸ்க்கில் கலந்து கொள்கிறார். அந்த நேரத்தில் கோபியும் சரியாக உள்ளே வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+