கோபியை போலீசில் மாட்டிவிட்ட பாக்கியா.. கைகட்டி பார்த்து சிரிக்கும் பழனிச்சாமி.. எதிர்பாராத டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்க்கு அவரை திட்டுவதற்காக போன நிலையில் அங்கு எதிர்பாராத அதிர்ச்சி கிடைக்கிறது.
பாக்யாவிடம் பழனிச்சாமி லவ் ப்ரொபோஸ் பண்ணுனதற்காக கோபி பழனிச்சாமியை திட்டி அவமானப்படுத்துகிறார்.

ஆனால் கடைசியாக பாக்யா மூலம் கோபிக்கு பெரிய பிரச்சனை வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி பாக்யாவை திட்டுவதற்காக அவர் படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வேகமாக வருகிறார். அதே நேரத்தில் பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் காரணமாக பாக்யாவிடம் பழனிச்சாமி ப்ரபோஸ் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இப்போ பாக்கியலட்சுமி.. தொடரும் அதே கதை.. இது நல்லாவா இருக்கு..?
பழனிச்சாமி ப்ரொபோஸ் பண்ணுவதை பார்த்த கோபி அதிர்ச்சியாகி அந்த ரூமில் இருந்து வெளியே வந்து கீழே காத்திருக்கிறார். அப்போது அங்கு வரும் பழனிச்சாமி கோபி சார் என்ன இங்க நிக்கிறீங்க வாங்க ஒரு ஜூஸ் குடிச்சிட்டு வரலாம். என்று கேட்க உங்களுக்கு அறிவு கிடையாதா? எதற்காக இப்படி பண்ணிட்டு இருக்கீங்க. அவ்வளவு பேரு முன்னாடி நீங்க பாக்கியாவுக்கு லவ் ப்ரொபோஸ் பண்றீங்க..? உங்க வயசு என்ன? பாக்கியாவுக்கு மூணு குழந்தை இருக்கு, இப்ப இது எல்லாம் உங்களுக்கு தேவையா என்று கோபமாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பல பழனிச்சாமி அது டாஸ்க் அதனால் தான் அப்படி பேசினேன் என்று சொல்ல, கோபி அதையெல்லாம் கேட்காமல் திட்டிக்கொண்டு பிறகு அங்கிருந்து கோபமாக வெளியே கிளம்புகிறார். அப்போது பாக்யாவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் இருந்து வெளியே வரும்போது காரில் வரும் கோபியின் முன்பு பைக்கை நிறுத்துகிறார். அதனால் காரில் இருந்து இறங்கி வந்த கோபி பாக்யாவை திட்டுகிறார். மேலும் பழனிச்சாமி பாக்யாவுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணுனதை பற்றியும் பேசுகிறார்.

அதற்கு பாக்கியா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? நீங்க அப்போ இப்பவும் வேவு பாக்கறதுக்காக அங்க வந்தீங்களா? நான் எப்படி போனா உங்களுக்கு என்ன என்று கேட்க, அது எப்படி உன்னை விட முடியும்? உனக்கு குழந்தைங்க இருக்காங்க. வெக்கமா இல்லையா? என்று கேட்டு உன்னை மாதிரி தானே உன் குழந்தைகளும் வளருவாங்க என்று சொல்ல, அவங்க அப்பா மாதிரியே அவங்க வளரலையே? நீங்க டைவர்ஸ்க்கு முன்னாடி என்ன ஆட்டமெல்லாம் போட்டீங்க? அதெல்லாம் மறந்து போயிட்டா என்று திட்டி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அந்தப் பக்கமாக பழனிச்சாமி அவருடன் படிக்கும் லோபிதாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யாவிடம் கோபி ரோட்டில் பிரச்சனை செய்து கொண்டிருப்பதை பார்த்து காரை நிறுத்தி பழனிச்சாமி என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் கோபி அளவுக்கு அதிகமாக பேசிக் கொண்டிருக்க இனி இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது நான் போய் கேட்கிறேன் என்று பழனிச்சாமி கிளம்புகிறார். அப்போது அந்த இடத்திற்கு சரியாக போலீஸ்காரர்கள் ஜீப்பில் வருகிறார்கள்.
ரோட்டில் என்ன சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்க இந்த ஆளுதான் என்கிட்ட பிரச்சனை பண்றாரு என்று பாக்கியா சொல்ல, ஒன்னு இல்ல சார் குடும்ப பிரச்சனை தான் இவங்க என் மனைவி தான் என்று கோபி சொல்ல, இல்ல சார் இவங்க யாருன்னு எனக்கு தெரியாது. நான் இவங்க மனைவி கிடையாது என்று பாக்கியா சொல்ல, போலீஸ்காரர்கள் கோபியை திட்டி வார்ன் பண்ணுகின்றனர். பிறகு பாக்யாவை போக சொல்லிவிட்டு கோபியை விசாரிக்க பழனிச்சாமி ஓகே பிரச்சனை நடந்தது முடிவடைந்தது நாம போகலாம் என்று கிளம்புகிறார்.

அப்போது போலீஸ் ஆபீஸரிடம் கோபி சார் வேற ஒன்னும் இல்ல இவங்க என் மனைவி தான். ஆனா இப்போ இல்ல. டைவர்ஸ் ஆயிடுச்சு. ஒரு சின்ன பிரச்சனை அதனால தான் போய் பேசிட்டு இருந்தோம் என்று சொல்ல, இனி நீங்க இந்த மேடத்து கிட்ட எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்னு எழுதி குடுங்க.
இனி ஏதாவது பிரச்சனை பண்ணுனா உங்களை தூக்கி உள்ள வச்சுருவேன் என்று சொல்லி மிரட்ட கோபியும் எழுதிக் கொடுக்கிறார். பிறகு போலீஸ் ஆபீஸர் கிளம்பியதும், நம்மள யாருன்னு கூட தெரியாதுனு சொல்லிட்டு போயிட்டாளே..! என்று கோபி புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications