கோபியால், பழனிசாமியோடு பாக்கியாவுக்கு கல்யாணம்.. அம்மாவின் திடீர் முடிவு.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவும் பழனிச்சாமியும் பழகுவதை பற்றி தப்பு தப்பாக பழனிசாமியின் அம்மாவிடம் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வரும் பழனிச்சாமியிடம் பாக்கியாவை பிடித்திருக்கிறதா? என்று அம்மா கேட்க அதற்கு பழனிசாமி எதிர்பாராத பதிலை கொடுக்கிறார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா பைக்கில் வந்து நிறுத்துகிறார். அப்போது பின்னாடியே வந்த பழனிச்சாமியும் லோகிதாவும் பாக்கியாவிடம் வந்து நாங்கள் ஷாப்பிங் வந்தோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எல்லாவற்றையும் நீங்க பாத்துட்டீங்களா? என்று பாக்கியா கேட்க ஆமாம் என்று சொல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து பாக்யாவிடம் லோகிதா நீங்க நல்லா இருக்கீங்களா? என்று கேட்க, நான் இப்போ நல்லா தான் இருக்கிறேன். ஆனால் அத அவரால தாங்கிக்க முடியல. அதனால தான் இப்படி பிரச்சினை பண்றாரு என்று பாக்கியா சொல்ல, கோபி ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்சில் வந்து பழனிச்சாமியிடம் சண்டையிட்டது குறித்தும் பழனிச்சாமி சொல்ல பாக்கியா மேலும் கோபம் அடைகிறார்.

அதைத் தொடர்ந்து கோபி பழனிச்சாமியின் வீட்டிற்கு வருகிறார். குழந்தைக்கு எப்படி சொல்லனுமோ அப்படி பக்குவமா எடுத்து சொன்னேன். ஆனா இவன் அடங்க மாட்டானே என்று கோபத்தோடு வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டு வாசலில் வந்ததும் ஐயோ உள்ள ஜிம் பாய்ஸ் இருப்பாங்களே என்று பயப்படுகிறார். பிறகு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்து பார்க்க அங்கே பழனிச்சாமி அம்மா புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் கோபியை பார்த்ததும் வாப்பா உட்காரு என்று சொல்ல, அதற்கு கோபி நான் உங்க பையனை பத்தி சொல்லுறதுக்காக வந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு உங்க பையன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரு என்று சொல்ல, அதற்கு சந்தோஷமாகும் அம்மா, யார் அந்த பொண்ணு அந்த பொண்ணையே பழனிச்சாமிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி ஆகிறார்.
உங்க பையன் சுத்துற பொண்ணு என் பொண்டாட்டி என்று சொல்ல, உன்னை நான் பாக்யா வீட்டில் பார்த்திருக்கேனே என்று பழனிச்சாமி அம்மா கேட்க, பாக்கியா தான் என்னுடைய மனைவி என்று சொல்ல, அதான் உங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சே என்று கேட்க, அதற்கு எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னா அதுக்குன்னு அப்படியே விட்ரலாமா? அவள் எப்படியோ போகட்டும்னு என்னால இருக்க முடியாது உங்க பையன் கிட்ட எடுத்து பக்குவமா எடுத்து சொல்லியாச்சு அவங்க அடங்குற மாதிரி இல்லை என்று பேசிவிட்டு வேகமாக கிளம்புகிறார்.
அப்போது அதைத் தொடர்ந்து பாக்யா வீட்டிற்கு ஜெனியின் அம்மா வர எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனிக்கு எட்டு மாசம் ஆகிறது வளைகாப்பு வைக்கணும் என்று சொல்ல, அதற்குச் செழியன் வளைகாப்புக்கு பிறகு எங்க இருப்பா என்று கேட்க, அதற்கு ஜெனி அம்மா எங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போகிறோம். எனக்கு என் கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்லி விட்டு கிளம்புகிறார்.
அதைத்தொடர்ந்து பழனிச்சாமியின் வீட்டில் பழனிச்சாமியும் அவருடைய அம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது உனக்கு பாக்யாவை பிடிக்குமா? என்று கேட்க, ஆமா ரொம்ப பிடிக்கும் என்று பழனிச்சாமி சொல்ல, கோபி வீட்டிற்கு வந்தது பற்றியும் பாக்கியாவையும் உன்னை பற்றியும் ஏதோ சொன்னான்... என்று அம்மா சொல்ல, பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications