பாக்கியலட்சுமி ட்விஸ்ட்.. 600க்கு 600 இனியா சாதனை.. பக்கத்தில் ராதிகா.. அப்போ பாக்கியா நிலைமை..?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் இனி கதை என்ன மாதிரி போகப் போகிறது என்று சில தகவல்கள் கசிந்து வருகிறது.
ஏற்கனவே இனியாவிற்கு நாளை தான் ரிசல்ட் வரும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இனியா ராதிகாவோடு எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இனியாவின் மதிப்பெண் பட்டியல் என்று சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் இனியா 600 மதிப்பெண்கள் எடுக்கப் போகிறார் என்று தெரிகிறது.
விஜய் டிவில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் பெண்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று இருக்கிறது. காரணம் ஒரு ஆண் தன்னை விட்டுவிட்டு சென்று விட்டாலும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதும் அடிமட்டத்தில் இருக்கும் பெண்களுக்குள் இருக்கும் திறமை பல நேரங்களில் ஆண்களால் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் இந்த சீரியலின் மூலமாக தெரிகிறது.

அதுபோல பாக்கியலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டிருப்பதை அதிகமான ரசிகர்கள் தாங்களே ஜெயிப்பது போன்று நினைத்து பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாக்கியா அடுத்தடுத்து ஒவ்வொரு மாதமும் கோபியிடம் போட்டியிட்டு சவாலில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். கோபியிடம் மட்டுமல்லாமல் ராதிகா விடவும் தான் போடும் போட்டி, சவால்களிலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தான் பாக்கியா, ராதிகாவிடமும், கோபியிடமும் போட்ட சவாலில் ஜெயித்து ராதிகா கோபியை வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார். இந்த நிலையில் இனியா பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து இருக்கிறார். அதற்கான ரிசல்ட் நாளை வரும் என்று இன்றைய எபிசொட்டில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் பாக்கியா தனக்கு புதியதாக சமையல் காண்ட்ராக்ட் ஒன்று கிடைத்திருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வருகிறேன் என்று வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இனியா 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று இருப்பது போன்று மதிப்பெண் பட்டியலும் அதேபோல இனியா மாலையோடு இருக்கும்போது அருகே ராதிகா இருப்பது போன்றும் சில புகைப்படங்கள் இருக்கிறது. இதனால் இனியாவிற்கு பாராட்டு விழா நடக்கும் இடத்தில் கோபியோடு சேர்ந்து ராதிகா தான் அம்மாவாக நிற்க போகிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாக்யா வீட்டில் இல்லாததால் ராதிகா இனியா பக்கத்தில் நின்று அடுத்த பிரச்சனை இனி வரப்போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications