மண்டபத்தில் பாக்யாவுக்கு பாயாசத்தால் வந்த பிரச்சனை.. கண் கலங்கி அழும் கோபி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா அதிக மார்க் எடுத்ததால் அவரை அம்மா அப்பாவோடு ஸ்கூலுக்கு வரச் சொல்லி டீச்சர் கூப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் பாக்யா மண்டபத்தில் செய்த செயலால் வீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 20 ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் இனியாவுக்கு எல்லோரும் ஸ்வீட் ஊட்டி விட்டு சந்தோஷமாக இருக்கின்றனர். அப்போது இனியாவிற்கு போன் செய்வதற்காக வெளியில் சென்று இருந்த பாக்கியா மண்டபத்திற்கு உள்ளே வர அங்கே பொண்ணு வீட்டுக்காரர்களும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதை பார்த்து பாக்கியா என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு செல்வி பாயாசம் முடிந்து விட்டது. அதனால் தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து சண்டை போடுறாங்க என்று சொல்ல, பாக்யா பயந்து போகிறார். மறுபக்கம் இனியாவை கூட்டிக்கொண்டு எல்லோரும் ஸ்கூலுக்கு போய்க்கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா அம்மா இன்னும் வரலையே என்று சொல்ல, ஜெனி அவங்க ஸ்கூலுக்கு வந்துருவாங்க என்று சொல்லி ஆறுதல் கூறுகிறார்.
அப்போது அவர்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது கோபி ராதிகாவுடன் வெளியே சென்று கொண்டிருக்கும்போது இனியாவிற்கு ரிசல்ட் என்ன ஆச்சு என்று போன் பண்ணி கேட்க இனியா தான் பெற்ற மதிப்பெண்களை பற்றி சொல்ல கோபி அதை கேட்டு சந்தோஷத்தோடு அழுது கொண்டு ராதிகாவை கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போகிறார்.
மறுபக்கம் பொண்ணு வீட்டுக்காரர்கள் பாக்யாவை கூப்பிட்டு பெரிய சமையல்காரர் என்று சொன்னாங்க. ஒரு பாயாசம் வைக்க கூட முடியலையா? உன்னால எவ்வளவு பெரிய குழப்பம் ஆயிடுச்சு. எங்க பொண்ணு கல்யாணம் நிற்க போகுது என்று சொல்ல, பாக்கியா மாப்பிள்ளை வீட்டினரிடம் மன்னிப்பு கேட்கிறார். இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பாக்கியாவை திட்டி விடுகிறார்கள்.
அதே நேரத்தில் ஸ்கூலுக்கு வரும் இனியாவை எல்லோரும் மலர் தூவி வரவேற்க, அங்கு வரும் கோபி ஓடி வந்து இனியாவை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து சந்தோஷமாக எல்லோரிடமும் இது என்னுடைய பொண்ணு என்று பெருமையாக பேசுகிறார்.
அதே நேரத்தில் கல்யாண வீட்டில் பொண்ணு வீட்டுக்காரர்கள் உங்களால்தான் பிரச்சனையே என பாக்கியாவையும் அவரோடு சமையலுக்கு வந்தவர்களையும் பிடித்து ஒரு இடத்தில் இருக்க வைக்கின்றனர். நிச்சயதார்த்தம் மட்டும் நடக்கலைனா உங்களை போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்ட, பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications