பழனிச்சாமியால் காப்பாற்றப்படும் பாக்கியா.. அவமானப்படுத்தி அழ வைக்கும் இனியா.. மாறிப்போன கதை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 21ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் பாக்கியா விழாவுக்கு லேட்டாக வந்ததால் இனியா கோபித்துக் கொண்டு பாக்யாவை அவமானப்படுத்துகிறார்.
இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் கடந்த வாரத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

கோபி தன்னை விட்டு விலகி இன்னொரு பெண்ணை திருமணம் செய்த பிறகு பாக்யா அழுது கொண்டு வீட்டில் அடங்கி இருக்காமல் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல அவமானங்களையும் சவால்களையும் தாண்டி சாதித்துக் கொண்டிருக்கிறார். தன்னால் முடியாது என்று சொந்த கணவர் மட்டுமல்லாமல் குழந்தைகளும் கூட தன்னை அவமானப்படுத்திய போது, தன்னுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக பல வேதனைகளை வெற்றியாக மாற்றிய பாக்யாவை பலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா சமையலுக்கு சென்றிருந்த இடத்தில் இனியாவிடம் போன் பேசுவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது பாக்யாவின் சமையலில் ஒருவர் பாயாசத்தை சரியாக வைக்காமல் விட்டதால் நிச்சயதார்த்த வீட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் சண்டை வந்து விடுகிறது.
அதனால் பாக்கியாவை அங்கே பிடித்து வைத்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் இனியா தனக்காக பாக்கியா வரவில்லையே என்று கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யாவை காணவில்லை என்று பழனிசாமியும் ராமமூர்த்தியும் தேடி போன நிலையில் அங்கு நடந்த பிரச்சனைகளை பற்றி தெரிந்து அங்கிருந்தவர்களிடம் பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் நாளைய எபிசோட்டுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி இருக்கும் தெருவில் இனியாவிற்கு விழா எடுத்து அவர் அதிகம் மதிப்பெண் பெற்றிருப்பதை பாராட்டுகிறார்கள். அப்போது விழா மேடையில் கோபி மற்றும் ராதிகா இருவரும் இனியாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா அங்கு வருகிறார்.
இனியாவை எல்லோரும் பாராட்டுவதை பார்த்து பாக்கியா சந்தோசத்தில் மேடையில் ஏறி இனியாவை தோளில் தொட்டு சாரி இனியா என்று சொல்ல, அதற்கு இனியா பாக்யாவின் கையைத் தட்டி விடுகிறார். அதற்கு பாக்யா சாரி இனியா நான் என்ன சொல்ல வர்றேன்னா என்று சொல்ல வர, என்னை விட உனக்கு உன் கேட்டரிங் பிசினஸ் தான் உனக்கு பெருசுன்னு சொல்லப் போறியா? என்கிட்ட பேசாத என்று மேடையிலேயே திட்டுகிறார். அதற்கு பாக்யா அழுது கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர் ஒரு பிள்ளை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும், எப்படி வளர்க்க கூடாது என்பதற்கும் இனியா தான் சிறந்த உதாரணம் என்று இனியா மீது அதிகமான ரசிகர்கள் கோபத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இனியா அதிகமான மதிப்பெண்கள் வாங்கியது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications