செழியனுக்கு வந்த பிரச்சனை..கோபத்தில் கோபி..வீட்டை விட்டு கிளம்பும் ராதிகா..திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியா பழனிச்சாமி இடம் பேசுவதை கேட்டு தப்பாக புரிந்து கொள்கிறார்.
பழனிச்சாமி வீட்டிற்கு பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட கோபி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
செழியனின் கிளைன்ட் அவரிடம் நெருக்கமாக பேச செழியன் பிடி கொடுக்காமல் ஜெனியை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 12-ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி வீட்டிற்கு வருகிறார். அப்போது பாக்கியா பழனிச்சாமி இடம் போன் பேசிக் கொண்டிருக்கிறார். பழனிச்சாமியை எப்படியாவது திருமணம் செய்ய வைக்க வேண்டும் என்று அவர் மனதை மாற்றும் விதமாக பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்.
எப்ப வேணாலும், யாரு வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். நமக்கான துணையை நாம தேடிக்கணும் சார் என்று பாக்கியா பேசுவதை கேட்டு கடுப்பான கோபி நானே வயசாயிடுச்சு ஏதோ பசங்கள வச்சி பொழச்சிக்கலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன். ஆனா நீ வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இப்படி பேசுறியே பாவி பாவி என்று பாக்கியாவை பார்த்து கோபி வாசலில் நின்ற படியே புலம்பி கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து செழியன் அவருடைய லேடி கிளையன்டை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு வந்திருக்க அவர் லேட்டாக வந்து நான் உங்களை வேணும்னு தான் காக்க வச்சேன். ஏன்னா நான் உங்களுக்கு எத்தனை தடவையோ போன் பண்ணா நீங்க எடுக்கவே மாட்டேங்கறீங்க. என்ன காக்க வைக்கிறீங்க அதனாலதான் நான் காக்க வச்சேன் என்று சொல்கிறார்.

அதற்குச் செழியன் சில கிளைண்ட் எல்லாம் இருக்காங்களே ரொம்ப நேரம் காக்க வைக்கிறாங்க என்று சொல்ல, அப்ப நீங்க என்னை இன்னும் கிளைண்ட் ஆக மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கீங்களா? என்று அந்த லேடி பேசி, பிறகு நேத்து தான் உங்களை பற்றி என் பிரண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன். அப்போ அவ கூட இந்த காலத்துல இப்படிப்பட்ட பசங்க எல்லாம் இருக்காங்களா என்று கேட்டா என்று சொல்ல, அதற்கு செழியன் என்னை எப்படி உங்க பிரண்ட்க்கு தெரியும் என்று கேட்க, நான் தான் உங்க போட்டோ அனுப்பினேன் என்று அந்த கிளைண்ட் சொல்கிறார்
பிறகு இருவரும் ஜூஸ் ஆர்டர் செய்து கொண்டிருக்கும்போது ஜெனி செழியனுக்கு வீடியோ அனுப்பினதை பார்த்து செழியன் சிரித்துக் கொண்டிருக்க, உங்களுக்கு இப்படி எல்லாம் சிரிக்க தெரியுமா என்று அந்தப் பெண் வழிந்தபடியே பேச, ஆமா நாங்க குழந்தை பிறக்கப் போற எக்சைட்ல இருக்கோம். அதனால ஏதாவது குழந்தை பற்றிய வீடியோவை ஜெனி அப்பப்ப அனுப்புவா அதை பார்த்து சிரிச்சிட்டு இருக்கேன் என்று செழியன் சொல்ல அந்த பெண் கடுப்பாகிறார்.
பிறகு உங்க பேமிலி எல்லாம் பத்தி கொஞ்ச நேரம் மறந்துட்டு உங்கள பத்தி பேசுங்க என்று கிளையண்ட் சொல்ல, அதற்கு செழியன் மீண்டும் ஜெனியை பற்றிய பேசிக் கொண்டிருக்க அந்தப் பெண் போதும் என்று முடித்துக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் வீட்டில் ஜெனி பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் அமிர்தா ஜெனியை திட்டுகிறார்.
பிறகு அனைவரும் வீட்டில் டெக்கரேஷன் வேலைகளை செய்து கொண்டிருப்பதை பார்த்து கோபி இனியாவிடம் என்ன யார் வராங்கன்னு இவ்ளோ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க, உங்களுக்கு தெரியாதா? பழனிச்சாமி அங்கிள் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வராரு என்று சொல்ல கோபி மீண்டும் புலம்புகிறார்.

அப்படியே தன்னுடைய ரூமுக்கு வர அங்கே ராதிகாவும் மயூவும் கிளம்பி கொண்டிருக்க, அதை பார்த்து கோபி மேலும் அதிர்ச்சி ஆகி, அப்போ நம்ம தவிர எல்லாருமே பாக்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல சந்தோஷமா தான் இருக்காங்க போல என்று புலம்பிக் கொண்டிருக்க, ராதிகா நான் வெளியே என்னுடைய பிரண்ட்க்கு எங்கேஜ்மென்ட் நான் போயிட்டு வரேன் என்று சொல்லி நீங்களும் வாங்க என்று கூப்பிடுகிறார்.
நாம வேற எங்கேஜ்மென்ட் போனா இங்க பாக்யாவுக்கு எங்கேஜ்மென்ட் பண்ணி வச்சிருவாங்க போலயே என்று கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மையூ வாங்க டாடி ப்ளீஸ் போயிட்டு வரலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications