பழனிச்சாமி வீட்டுக்கே சென்று மிரட்டும் கோபி..கடைசியில் கிடைத்த அதிர்ச்சி..காமெடி பீஸா மாறிட்டாரே
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பழனிசாமி வீட்டுக்கே சென்று பழனிச்சாமியை மிரட்டுகிறார்.
நீங்க எப்படி என் பொண்டாட்டி கூட பேசலாம் என்று கோபி கோபமாக கேட்க, அதற்கு பழனிச்சாமி அது எங்க ரெண்டு பேருக்கும் உள்ள பர்சனல் என்று பதிலடி கொடுக்கிறார்.
பழனிச்சாமி சொன்ன வார்த்தையை கேட்டு கோபி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது எதிர்பார்க்க வைக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த வாரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாக்கியாவும் பழனிச்சாமியும் காதலிப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் கோபி ஒரு பக்கம் வீட்டில் நடக்கும் விஷயங்களை பார்த்து புலம்பி கொண்டு இருக்க, அதே நேரத்தில் பாக்யா பழனிச்சாமிக்கு கல்யாணம் பண்ணி வைத்தே ஆவேன் என்று பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பாக்யாவுக்கு ஆதரவாக ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் தங்களுடைய உறவுக்கார பெண்ணையே பழனிச்சாமிக்கு பேசி முடித்து விடலாம் என்று வீட்டில் வைத்து பெண் பார்க்கும் படலத்தை வைத்திருந்தனர். ஆனால் அந்த பெண்ணிற்கு பழனிச்சாமி படிக்கவில்லை என்பதும், அதுபோல பழனிச்சாமிக்கு அக்கா தங்கைகள் அவர்களுடைய குடும்பங்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து போகும் என்பதெல்லாம் தெரிந்து அதையெல்லாம் நான்தான் பார்க்கணுமா என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதனாலே இந்த பொண்ணு நமக்கு செட் ஆகாது. அந்த பொண்ணு நெனச்ச மாதிரி படிச்ச ஒரு மாப்பிள்ளையே அவங்களுக்கு கிடைக்கட்டும் என்று பழனிச்சாமி கூறிவிட்டு எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் இதை எல்லாம ஏத்துக்க மாட்டோம் உங்களுக்கு கல்யாணம் பண்ணியே வைப்போம் என்று பாக்யாவும் அவருடைய குடும்பத்தினரும் கூறுகின்றனர்.

ஆனால் இது எல்லாம் தெரியாத கோபி பழனிச்சாமி மீது கோபத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்றும் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற கோபி அங்கு வாசலில் இருந்த பவுன்சரை பார்த்து ஒரு நிமிடம் பயந்து போய் விடுகிறார்.
பிறகு நான் பழனிச்சாமியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவர்கள் வீட்டிற்குள் கூப்பிட்டுக் கொண்டு வருகின்றனர். அங்கே பழனிச்சாமி இடம், மிஸ்டர் பழனிச்சாமி நீங்க எதுக்கு அடிக்கடி என்னோட வைஃபை மீட் பண்ணி பேசுறீங்க என்று கேட்க, அதற்கு பழனிச்சாமி யோசித்தபடி உங்க மனைவியா என்று கேட்கிறார். பிறகு உங்க மனைவியை நான் பார்த்ததே கிடையாது என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து கோபி பொய் சொல்லாதீங்க. சூப்பர் மார்க்கெட்டில் கொஞ்சி கொஞ்சி பேசறது, சிரிக்கிறது டியூஷன் கிளாஸ்ல லூட்டி அடிக்கிறது, இதெல்லாம் இத்தோட நிறுத்திக்கோங்க. புரியுதா இல்லையா? என்று மிரட்ட அதற்கு பழனிச்சாமி அதெல்லாம் எங்களுக்குள் இருக்கிற பர்சனல். அதனால யு மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் என்று பேச அதை கேட்டு கோபி அதிர்ச்சியாகிறார்.
தற்போது இந்த கலகலப்பான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இதை உண்மை என்று நம்பும் கோபி, இனி எந்த மாதிரி பிரச்சனை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ப்ரோமோவில் கோபியின் நடிப்பை பார்த்து அதிகமான ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications