மயூவால் மோதிக் கொள்ளும் ராதிகா, பாக்கியா..கோபத்தில் ஈஸ்வரி..இனி கோபி எடுக்கும் முடிவு..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயூ, கோபியும் ராதிகாவும் சண்டை போடுவதை பார்த்து பயந்து இருக்க பாக்கியா ஆறுதல் கூறுகிறார்

மயூக்கு கோபி பாடம் சொல்லிக் கொடுப்பதை பார்த்து இனியா கோபப்பட ஈஸ்வரி திட்டுகிறார்.

ஈஸ்வரி திட்டுவதால் கோபத்தில் ராதிகா பாக்யாவிடம் சண்டை போடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 1ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மாடிப்படியில் மயூ அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க பாக்கியா அதை பார்த்து பீல் ஆகிறார். பிறகு மயூ ராதிகா மற்றும் கோபி போடும் சண்டையை கேட்டு பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 1th Episode full update

பிறகு மயூவை பாக்யா கூட்டிக்கொண்டு டைனிங் ஹாலில் உட்கார வைத்து ஏதாவது சாப்டியா என்று கேட்க, நீங்க முன்னாடி நல்லா பேசுவீங்க ஏன் இப்போ என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க. உங்க கூட மம்மி என்னை பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் ஈஸ்வரி மயூ இங்கே இருக்கக் கூடாது என்று திட்டுகிறார். பிறகு பாக்கியா ஈஸ்வரியை தனியாக கூப்பிட்டு பேசுகிறார்.

அத்தை, அந்த பொண்ணு பாவம் சின்ன பொண்ணு என்று சொல்ல, அப்பா அம்மா செஞ்ச பாவம் குழந்தைகளுக்கு வரணும் அது வரட்டும் என்று கோபமாக ஈஸ்வரி திட்டி விட்டு செல்கிறார். அடுத்ததாக ஜெனி ரூமில் தனியாக பாட்டு கேட்டுக் கொண்டிருக்க அங்க வரும் செழியன் ஜெனி வயிற்றில் கை வைக்க பயந்து விடுகிறார்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தன்னிடம் லேடி க்ளைன்ட் ஒருவர் அடிக்கடி போன் செய்து டார்ச்சர் செய்வது பற்றி ஜெனி இடம் கூறுகிறார். அவங்க என்ன மீட் பண்ணனும்னு சொல்றாங்க, ஆனா ஒர்க் தவிர மிச்சம் எல்லாம் பேசுறாங்க என்று சொல்ல, நீ எதுவும் நினைச்சுக்காத என்கிட்டயே உன்னால எப்பவாவது தான் ரொமான்டிக்கா பேச முடியும். நீ வேற யாருகிட்டயும் எதுவும் பேச மாட்ட என்று ஜெனி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

பிறகு இரவு கோபி, ராதிகா, மயூ பேசிக் கொண்டிருக்கும்போது மையூ தனக்கு கணக்கில் டவுட் என்று கேட்க கோபி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் இனியா இதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இனியா வந்து நிற்பதை கவனிக்காமல் கோபி மயூக்கு கணக்கு சொல்லிக் கொடுத்ததை பார்த்த ராதிகா வேண்டுமென்றே மயூ உனக்கு எந்த சந்தேகம் என்றாலும் அப்பாவை கேளு என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

இதனால் கடுப்பான இனியா கீழே வந்து விட ஈஸ்வரி என்னவென்று கேட்கிறார். அதற்கு இனியா மேலே நடந்ததை எல்லாம் சொல்ல, கடுப்பான ஈஸ்வரி வா நான் கேட்கிறேன் என்று கூட்டிக்கொண்டு போய் கோபியை தள்ளி உட்காரு என்று சொல்லி பிறகு நீ இனியாவிற்கு தான் கிளாஸ் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவள்தான் இப்போது 12ஆம் வகுப்பு படிக்கிறா அவளுக்கு பாடம் சொல்லிக் கொடு என்று திட்ட, என்னுடைய குழந்தைகளுக்கு தான் நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன் என்று கோபி கூறிக் கொண்டிருக்கிறார்.

இதைக் கேட்டு மயூ எழுந்து விட ராதிகா நான் சொல்லிக் கொடுக்கிறேன் என்று மயூவை கூப்பிட வேண்டாம் நான் படிச்சிட்டேன் என்று மயூ கூறுகிறார். மயூவும் ராதிகாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர். பிறகு கோபி ராதிகா என்று கூப்பிட ஈஸ்வரி என்ன ராதிகா நீ இனி இவளுக்கு கிளாஸ் சொல்லிக் கொடு என்று சொல்ல இது என்ன புது பிரச்சனையாக இருக்கிறது என்று கோபி புலம்பி கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 1th Episode full update

பிறகு கிச்சனில் இருக்கும் பாக்யாவிடம் வந்து ராதிகா நீங்க ரொம்பவே நல்லா பிளான் போடுரீங்க இனியாவை விட்டு கோபியை பிரித்து கூட்டிட்டு வந்து விடலாம் என்று பிளான் போடுறீங்க என்று சொல்ல, நான் உங்ககிட்ட எத்தனையோ தடவ சொல்லிட்டேன். அவர் எனக்கு தேவை இல்லை என்று பிள்ளைகளை வச்சி அவரை கூட்டிட்டு வரணும்னு நினைச்சா அதை எப்பவோ செஞ்சி இருப்பேன் என்று சொல்கிறார்.

அப்புறம் கோபி மயூ கிட்ட பாசமா இருக்கும்போது இனியாவை அனுப்பி பிரிக்க பாக்குறீங்க, அத்தை கிட்ட சொல்றீங்க என்று ராதிகா சொல்ல அவங்க நான் சொல்லி தான் வந்தேன் என்று சொன்னாங்களா? என்று பாக்கியா கேட்க, அதற்கு ராதிகா அவங்க அப்படி எதுவும் சொல்லல என்று சொல்ல, அப்போ அவங்க கிட்ட உங்களால எதுவும் பேச முடியலைன்னு என்கிட்ட வந்து பேசுறீங்களா? என கேள்வி கேட்கிறார். ராதிகா ஷாக் ஆகிறாய். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+