ஏய் நிறுத்து.. குடும்பத்தோடு துரத்துவேன்.. கோபிக்கு பாக்கியாவின் சவால்.. இனி வருவது இதுதான்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் பாக்கியா மீண்டும் சவால் விடுகிறார்.
இந்த வீடு எனக்கானது உங்களுக்கு இங்கே இருக்க உரிமை இல்லை என்று ராதிகா பாக்யாவை மிரட்ட பாக்யா கோபத்தில் பதிலடி கொடுக்கிறார்.
அதே நேரத்தில் ஈஸ்வரி பாக்யாவுக்கு ஆதரவாக நிற்க பாக்கியா வார்த்தையை கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல ட்விஸ்ட் இந்த வாரம் வரப்போகிறது. ஏற்கனவே பழனிச்சாமியோடு பாக்கியா பேசுவது பிடிக்காமல் கோபி சில வாரங்களாக புலம்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று வீட்டிற்கு வந்த பழனிச்சாமி இனியாவுக்கு கொடுத்த பேனாவை அனைவர் முன்னாடியும் கீழே தெரியாமல் விழுவது போல விழ வைத்து உடைத்து விட்டார்.

இந்த நிலையில் பழனிசாமி அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டாலும், பாக்கியா பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதே நேரத்தில் பழனிச்சாமி தான் இனியாவிற்கு வாழ்த்து சொல்வதற்காக மட்டுமல்லாமல் உங்களுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன். ஒரு கல்யாண பங்க்ஷன் இருக்கிறது என்று சொல்ல அதற்கு பாக்கியா முடியாது என்று கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பாக்யாவின் வீட்டிற்கு இன்று ராதிகாவின் அண்ணனும் அண்ணியும் ராதிகா அம்மாவோடு வந்திருக்கின்றனர். அதனால் ராதிகாவின் அம்மா ஈஸ்வரியை ஜாடை மாடையாக பேச, ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் கிச்சனில் இருந்த பாக்யாவிடமும் ராதிகா வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கான ப்ரமோவில், என்ன கோபியை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி இந்த வீட்டையும் எடுத்துக்கலாம்னு பாக்குறீங்களா என்று ஈஸ்வரி ராதிகாவை மிரட்ட அதற்கு ராதிகா ஏ.... என்று ஈஸ்வரியை அதட்டுகிறார்.
அப்போது அங்கு இருக்கும் பாக்யா நிறுத்துங்க, விட்டா மரியாதை இல்லாம ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கீங்க, என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்று திட்ட அந்த நேரத்தில் அங்கு கோபி வருகிறார். கோபி இடம் ராதிகா இது என் வீடு இல்லையா கோபி? என்று கேட்க இது உன்னோட வீடு தான் ராதிகா என்று கோபி சொல்ல, இந்த வீடு என் வீடு என்று பாக்யா கூறுகிறார்.
அதற்கு ராதிகா உங்களுக்கு இங்க இருக்கவே உரிமை இல்லைன்னு போலீஸ் சொல்லிட்டாங்க இல்ல என்று கேட்க, கோபி 18 லட்சம் ரூபாய் இன்னும் கொடுக்கல இல்ல நீ, என்று பாக்கியாவிடம் கேள்வி கேட்க, அதற்கு சொடக்கு போட்ட பாக்யா ஒரே ஒரு மாசம் இதே இடத்தில உங்களுக்கு சேர வேண்டியதை எண்ணி உங்க முகத்துல வீசுறேன். அடுத்த நிமிஷம் நீங்க உங்க குடும்பத்தை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போகணும் என்று கூறுகிறார்.
தற்போது இந்த ப்ரோமோ வைரல் ஆகி வரும் நிலையில் youtube பக்கத்தில் இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இனி பழனிசாமியிடம் தன்னால் கல்யாணம் ஆர்டர் செய்ய முடியாது என்று சொன்ன பாக்கியா மீண்டும் அதை நான் செய்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க இருக்கிறார் என்றும், அந்த பணத்தை கோபியிடம் பாக்கியா கொடுக்க இருக்கிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஏற்கனவே கோபியிடம் சவால்விட்ட பாக்கியா இதே போலத்தான் மூன்று நாட்கள் தொடர்ந்து சமையல் ஆர்டர் செய்து கோபியிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஆரம்பத்தில் கெத்து காட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாயும் அடுத்த கல்யாண ஆர்டரில் சாம்பாதித்து பாக்கியா கொடுக்க இருக்கிறார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications