வீட்டை விட்டு சென்ற ராதிகா-கோபி.. தொந்தரவு செய்யும் பாக்யா.. எதிர்பார்க்காத கலகலப்பான ப்ரோமோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 29ஆம் தேதியிலிருந்து ஜூலை ஒன்றாம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் கோபியும் ராதிகாவும் வீட்டில் இருந்து கிளம்பி பெங்களூருக்கு கல்யாண வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அதே கல்யாண ஃபங்ஷனுக்கு பாக்கியா சமையல் செய்வதற்காக வந்திருக்கும் நிலையில் அங்கு பல பிரச்சனைகள் நடைபெறுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் தான் விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக பாக்கியா பாண்டிச்சேரியில் பழனிச்சாமியின் நண்பரின் திருமண பங்க்ஷனுக்கு சமைப்பதற்காக தன்னுடன் வேலை பார்க்கும் அனைவரையும் கூட்டிக்கொண்டு பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவிடம் உறவுக்காரர் வீட்டு திருமண பங்க்ஷன் இருப்பதை ராதிகாவின் அம்மா நினைவுபடுத்த, கோபியை கூப்பிட்டுக் கொண்டு ராதிகாவும் பாண்டிச்சேரிக்கு காரில் வந்து கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மூன்று நாட்கள் 5000 பேருக்கு பாக்கியா சமையல் செய்து விடுவாரா? என்று பழனிசாமியின் நண்பர் தாடி பாலாஜிக்கு சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் பாக்கியாவின் சமையல் காண்ட்ராக்டில் கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சனை நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து தற்போது புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபியும் ராதிகாவும் தனியாக ஒரு அறையில் இருக்கின்றனர் அப்போது கோபி ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்கிறார். இங்க வேற யாரும் இல்லை. நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம் என்று ராதிகாவின் கையைப் பிடித்து காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு முக்கியமா இங்க அந்த இடியட் பாக்கியா இல்லை என்று கோபி ராதிகாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாக்கியா அந்த இடத்திற்கு வந்து இறங்குகிறார். அதை தொடர்ந்து இரவு ராதிகா வெளியே போனில் பேசியபடி இருக்க, அப்போது செல்வி அங்கே கேட்டரிங் சமையல் செய்து கொண்டிருந்த உடையோடு ஆடிக்கொண்டே வருகிறார். இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அதைத் தொடர்ந்து கோபி இருக்கும் ரூமிற்கு கோபத்தில் வந்த ராதிகா நான் அவங்களை பார்த்தேன் என்று சொல்ல, யாரை பார்த்து என்று கோபி கேட்க அதான் உங்க வீட்டு வேலைக்காரியை என்று சொல்ல, கோபி அதிர்ச்சி ஆகிறார். பிறகு பழனிச்சாமியும் இங்க இருக்கான். செல்வியும் இங்க இருக்கா அப்போ இங்க என்ன நடக்குது என்று குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த கலகலப்பான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications