பாக்கியா ரகசியத்தை தெரிந்த பழனிச்சாமியின் முடிவு.. மனம் மாறிய ஈஸ்வரி.. இனியாவிற்கு கிடைத்த அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் இரவு நேரத்தில் பாய் பிரண்டோட வந்த இனியாவிற்கு பாக்யாவின் செயல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சரணுடன் ஒன்றாக இரவு நேரத்தில் சைக்கிளில் வந்ததை பார்த்து பாக்கியா எதிர்பாக்காத செயலை செய்திருக்கிறார்.
நிலாவின் செயலால் ஈஸ்வரி மனம் மாறி குழந்தையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் கோபியை பற்றி சொல்ல முடியாமல் தவித்த பாக்யாவிற்கு ஆறுதலாக பழனிச்சாமி மாறி இருக்கிறார்.

பயப்படும் இனியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 15 வது நாளில் எபிசோடின் ஆரம்பத்தில் வண்டியில் ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று பாக்கியாவிடம் எழில் சொல்லிக் கொண்டிருக்கிறார். எழில் வண்டியை மெக்கானிக் இடம் கொண்டு சென்று காட்டி விட்டு வருவதாக பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே இனியா சரணோடு சைக்கிளில் வருகிறார். அம்மாவையும், அண்ணனையும் பார்த்த இனியா பயந்து நடுங்க சரண் அது உங்க அம்மா தானே என சொல்லி, ஹாய் ஆண்ட்டி என குரல் கொடுக்கிறார்.

இனியாவிற்கு வந்த சந்தேகம்
சரனைப் பார்த்த பாக்கியாவும் பதிலுக்கு ஹாய் சொல்ல, பிறகு எழிலை அறிமுகம் செய்து வைக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியான இனியா எப்படி அண்ணே அம்மா இப்படி மாறிட்டாங்க, முன்னாடி எல்லாம் பொண்ணுங்க கூட பேசினாலே திட்டுவாங்க ஆனா இப்போ பையன் கூட பேசியும் ஒன்னும் சொல்லாம இருக்காங்க என்று கேட்கிறார். அடுத்து சரண் கேண்டின் திறந்ததற்காக பாக்யாவிற்கு வாழ்த்து சொல்லி ட்ரீட் கேட்க பாக்யா நாளைக்கு வீட்டுக்கு வா பிரியாணி செய்து வைக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்து சரண் அங்கிருந்து கிளம்ப நிலா பாப்பா ஈஸ்வரி ரூம்மை எட்டி பார்க்க ஈஸ்வரி உள்ளே வா நிலா என்று அழைக்க நிலா பாப்பாவும் உள்ளே சென்று அவருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

எடுத்துச் சொல்லும் ராமமூர்த்தி
அப்போது அங்கு வரும் ராமமூர்த்தி ரூமுக்குள் வந்ததும் நிலா பாப்பா விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இந்த குழந்தை எல்லோருடைய மனதையும் மாற்றிவிடும் என்று சொன்னேன் இப்போ உன்னையும் மாற்றிவிட்டது என்று சொல்ல, நான் இன்னமும் எழில் மற்றும் அமிர்தா மீது கோபம் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் குழந்தை மேல கோபத்தை காட்ட முடியுமா என்று சொல்கிறார். அதற்கு ராமமூர்த்தி இந்த குழந்தை சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்டு சொந்த பந்தங்களோட பாசத்தையும் இழந்துட்டு ஆனா கடவுள் மூலமாகத்தான் நம்மகிட்ட வந்து சேர்ந்து இருக்கு. நாம அதுக்கு அந்த ஒரு பாசத்தை கொடுக்க வேண்டும் எழில் அப்பாவாக இருந்து விட்டு போகட்டும். நீ கோபப்படாதே என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

திட்டும் பழனிச்சாமி
அடுத்து பாக்கியா கிளாஸ் ரூமில் இருக்கும் போது எல்லோரையும் எல்லோரும் அவர்களுடைய ஃபேமிலியை பற்றி ஆங்கிலத்தில் பேச சொல்ல பாக்யாவும் பேசுகிறார் எல்லோரைப் பற்றியும் சொன்ன பாக்கியா தன் கணவரை பற்றி சொல்லாத காரணத்தினால், அவரைப் பற்றி அவருடைய சக தோழிகள் கேள்வி கேட்க, பாக்யா பதில் சொல்ல முடியாமல் தவிக்க, கேள்வி கேட்டவரை பழனிச்சாமி திட்டுகிறார். அவர்களுக்கு சொல்ல விருப்பமில்லை என்றால் நீங்கள் சொல்ல வேண்டாம் என்று பாக்யாவிற்கு ஆறுதலாக பேசுகிறார்.

பழனிச்சாமி கொடுத்த சர்ப்ரைஸ்
அடுத்து பழனிச்சாமி எல்லோருக்கும் கேக் கொடுத்து. இது நானே செய்தது என சொல்லுகிறார். அது மட்டும் இல்லாம் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்ற விஷயத்தையும் சொல்ல, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு வீட்டில் நிலா பாப்பா விளையாடிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் அமிர்தா தக்காளி சட்னி அரைக்க ஜெனி நான் அரைக்கிறேன்னு சொல்லி வேலை செய்ய அப்போது அங்கு வரும் செழியன் என்ன அடுப்பு பக்கத்தில் நிற்கிற வயிற்றில் இருக்கும் பாப்பாவுக்கு சுடாதா என்று பதற, செல்வி இதெல்லாம் சுடாது தம்பி என்று செழியனை கிண்டல் செய்கிறார். அப்போது நிலா பாப்பா பெரியப்பா என்னை தூக்கு என்று செழியனிடம் சொல்ல, முதலில் அமைதியாக இருக்கும் செழியன் பிறகு நிலாவை தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறார். நிலா செழியனையும் கவித்து சாதனை செய்துவிட்டால் என்று ஜெனி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications