கோபியை பழிவாங்கும் ராதிகா.. புது நபரால் பாக்யாவுக்கு கிடைத்த அடி... இனி நடக்கப்போவது இதுதான்..!?
பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் பசுபதி புதிய கேரக்டராக அறிமுகம் ஆகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனியாவிற்க்கு சைக்கிள் வாங்க சென்ற இடத்தில் மயூவிற்க்கு அதிகமான விலையில் வாங்க வேண்டும் என்று ராதிகா கோபிக்கு செலவு வைக்கிறார்.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாக்கியா கோச்சிங் கிளாசில் செய்கிறார்.
கோச்சிங் கிளாசில் நடிகர் பசுபதி அறிமுகமாக அவருடைய பைக்கில் மோதி பாக்யாவுக்கு அடிபடுகிறது.

பாக்யாவின் அலப்பறை
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறுகிறார். அதற்கு செல்வி, ஜெனி, அமிர்தா என மூவரும் மாறி மாறி கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். செல்வி நானும் கூடவே வருவேன் என்று சொல்ல அவர்களை திட்டி விட்டு கிச்சனில் இருந்த கண்ணாடியை எடுத்து தன்னுடைய முகத்தை பார்த்து பெருமையாக சிரித்தபடி, பின்பு பூஜை அறையில் சாமி கும்பிட்டு விட்டு மகிழ்ச்சியோடு வீட்டில் இருந்து கிளம்புகிறார்.

மாட்டிக்கொண்ட கோபி
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்க்கு சேர வேண்டும் என்று அங்கு வந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டு நாளையில் இருந்து கிளாசுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கம் கோபி இனியா மற்றும் மயூவிற்கு சைக்கிள் வாங்கி கொடுக்க ராதிகாவோடு கடைக்கு வந்திருக்கிறார். இனியா இருவரும் சைக்கிளை பார்த்து க்கொண்டிருக்கின்றனர். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் கோபியை தங்களுடைய சைக்கிளை பார்க்க கூப்பிட கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.

வாயால் மாட்டிக் கொள்ளும் கோபி
இனியா ஒரு பக்கம் கோபியை தன் பக்கத்தில் வரும் படி கூப்பிட மயூ ஒரு பக்கம் தன்னிடம் வரும்படி டாடி என்று கோபியை கூப்பிட, ராதிகா மயூவை இடம் வரும்படி கண்ணசைக்க கோபி பிறகு மையுடன் சென்று என்னவென்று கேட்க இந்த சைக்கிள் பிடித்திருக்கிறது என்று மயூவிற்க்கு இது ஓகே என்று கோபியும் கூறிவிட்டு பிறகு இனியாவிடம் வந்து குறைந்த விலையில் சைக்கிள் எடுக்காத இதைவிட நல்ல பிராண்டுல பாரு, பிராண்டாக எடுத்தால்தான் ரொம்ப நாளைக்கு நல்ல ஓடும் என்று சொல்ல இதை ஒட்டு கேட்டு ராதிகா ஏற்கனவே ஜூஸ் செய்து வைத்திருந்த சைக்கிளை வைத்துவிட்டு ஃபாரின் பிராண்ட் சைக்கிள் எடுக்கிறார்.

ராதிகா கேட்ட கேள்வி
பிறகு மயூ வைத்திருந்த சைக்கிளை வந்து கோபி பார்க்க அது 27 ஆயிரம் ரூபாய் என இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவ்வளவு அதிகமாக விலை இருக்கிறது. மயூ நம்ம வீட்டுக்குள்ளே மட்டும்தானே சைக்கிள் ஓட்ட போறா எதற்கு இவ்வளவு விலை என்று கேட்க? அதற்கு ராதிகா இனியாவுக்கு மட்டும் நல்ல பிராண்டா எடுக்க சொல்லி இருக்கீங்க, என சொல்ல கோபி எதுவும் பேச முடியாமல் நல்லாத்தான் இருக்கு எடுத்துக்கோங்க என சொல்லி புலம்பிக்கொண்டே இருவருக்கும் பில் பே பண்ணுகிறார்.

நடிகர் பசுபதியின் என்ட்ரி
இந்தப் பக்கம் இங்கிலீஷ் கிளாசில் சேர்ந்த பாக்யா எழிலுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி, ஏற்கனவே இருவரும் இதுபோல கிளாசுக்கு வந்து பில் கட்ட சொன்னதும் ஓடியதை சொல்லி சிரித்துக் கொண்டு வண்டியில் வர எதிரே புல்லட் பைக்கில் வந்து என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பசுபதி. பாக்கியா போனில் பேசிய படியே வருவதால் அவருடைய பைக்கில் மோதி பாக்கியா கீழே விழுந்து விடுகிறார். பாக்யாவிற்கு உதவ அவர் முன் வர அதற்கு நானே எழுதுகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். அதன்பிறகு வீட்டுக்கு வரும் பாக்கியா வீட்டில் எழில், ஜெனி, அமிர்தா, செல்வி என அனைவரிடமும் தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சேர்ந்து இருக்கும் விஷயத்தை சொல்ல, அனைவரும் சந்தோஷப்பட்டு வாழ்த்து கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications