கோபியை அடிக்க பாய்ந்த ராதிகா.. மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி.. பாராட்டும் ஜெனி.. உணர்ச்சிகரமான தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் மீண்டும் கோபி பாக்யாவை பற்றிய பேசிக் கொண்டிருக்க கோபமாகும் ராதிகா கோபியை திட்டுகிறார்.

பாக்கியாவுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று செழியன் மற்றும் எழில் இருவரும் ஆறுதல் கொடுக்க பாக்யா சந்தோஷப்படுகிறார்.

மீண்டும் ராதிகா பாக்யாவிடம் நேற்று நடந்த பிரச்சனையை கூறி கோபமூட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 13ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில கோபி அருகில் இருக்கும் போது செழியன் தன்னை எதிர்த்துப் பேசியது மற்றும் பாக்யா நான் யாரு கிட்ட பேசினா உங்களுக்கு என்ன என்று கேட்டது என எல்லாத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 13th promo and Episode Highlights

பிறகு ராதிகா கோபியை சமாதானம் செய்ய முயற்சி செய்ய, அப்போது கோபி பாக்கியா பண்ணுனது தப்பு தானே பாக்யாவை யாரும் ஒன்னும் சொல்லாம என்னை குறை சொல்றாங்க, அந்த போஸ்ட் மரத்தை நான் பாக்யாவின் கேண்டின் சிறப்பு விழாவில் தான் பார்த்தேன். அப்பவே எனக்கு அவனை பிடிக்கவில்லை. என்று பழனிச்சாமியை பற்றி பேசுகிறார்.

பாக்யா அவன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்கா அவளை எதுவும் சொல்ல மாட்டுக்காக, அவளை தடுத்து நிறுத்த மாட்டாங்க என்று பாக்கியாவை பற்றிய பேசிக் கொண்டிருக்க ராதிகா கடுப்பாகி உங்களை இனி நான் அடிக்கப் போறேன் என்று பாய்கிறார். பிறகு நான் என்ன பத்தி உங்க அம்மாகிட்ட கேளுங்க என்று சொன்னா நீங்க பாக்கியாவை பற்றியே பேசிகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு பாக்யா மேல இன்னும் பொசஸ்னஸ் இருக்கு. பாசம் இருப்பதினால் தான் அவங்க வேற ஒருத்தவங்க கூட பேசறது உங்களால தாங்கிக்க முடியல என்று ராதிகா சொல்ல

சீ சீ வாய கழுவு அப்படியெல்லாம் இல்ல அந்த இடியட்டை எனக்கு அப்பவே பிடிக்காது. இப்பவா பிடிக்க போகுது? அவ சமையல் பொடி, கிச்சன், வீடு என்று இருந்த நிலையில் இப்போ இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கா? அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல என்று சொல்ல, நீங்க ஒழுங்கா உங்க அம்மா கிட்ட போற வர்றப்ப என்ன திட்டக்கூடாது என்று சொல்லி வைங்க, அதுக்கு உள்ள வேலைய பாருங்க என்று திட்டி விட்டு ராதிகா செல்கிறார்.

பிறகு ஹாலில் குடும்பத்தினர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி ராதிகாவிடம் கோபி சொன்னதை நீ பெருசா எடுத்துக்காத அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல, பாக்யாவை பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கு, என்ன அருகதை இருக்கு என்று ராமமூர்த்தியும் திட்டி ஸ்கூல் பையன் மாதிரி டெய்லி ஒரு பஞ்சாயத்த நம்ம கிட்ட கொண்டு வந்துகிட்டு இருக்காங்க என்று திட்டுகிறார்.

பிறகு செழியனை பாக்யா பார்த்துக் கொண்டே இருக்க ஏன் ம்மா அப்படி என்ன பாக்குற என்று செழியன் கேட்க, அப்போ பாக்யா செழியனை பெருமையாக பார்க்கிறார். அதற்கு செழியன் உன்னை பத்தி யாரு என்ன வேணாலும் சொல்லட்டுமா ஆனா நான் நம்ப மாட்டேன் என்று சொல்ல, எழில் அப்படியே கைய ஓங்கினதோட விட்டு இருக்க கூடாதுடா அந்த ஆளுக்கு ஒன்னு வச்சிருக்கணும் என்று சொல்ல, ஈஸ்வரி அவனை அடிச்சு நமக்கு என்ன ஆகப்போகுது? அவன அடிச்ச பாவம் நமக்கு வேணுமா என்று கேட்கிறார்.

பிறகு எழில் மற்றும் செழியன் இருவரும் பாக்கியாவிற்கு நல்ல சந்தோஷமா இருமா நீ நல்ல வளரணும் என்று ஆறுதல் கூறி, உனக்காக நாங்க இருக்கோம் என்று பாச மழை பொழிகின்றனர். எனக்கு நீங்க ரெண்டு பேரும் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பாக்கிய இருவரையும் தோளில் சாய்த்து கொள்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 13th promo and Episode Highlights

பிறகு மாடிக்கு வரும் செழியன் இடம் ஜெனி செழியா அது நீதானா? இதுக்கு முன்னாடி எல்லாம் இந்த வீட்டில் என்னென்னலாமோ நடக்கும், அப்பொழுது நீ எதுவுமே நடக்காத மாதிரி இருந்துகிட்டே இருப்ப, இப்ப மட்டும் பேசுற என்று சொல்ல, என்னுடைய அம்மாவை பத்தி தப்பா பேசும் போது என்னால பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது என்று சொல்ல, எனக்கு இதற்கு முன்பு நீ உங்க அப்பா மாதிரி இருப்பியோன்னு கொஞ்சம் பயம் இருந்துச்சு, ஆனா இப்பமெல்லாம் அந்த பயம் போயிடுச்சு என்று கூறுகிறார்.

அப்போது ஆபீஸ் கிளைன்ட் அந்த லேடி போன் பண்ணுகிறார். முதலில் போனை கட் பண்ணும் செழியன் பிறகு ஜெனி எடுத்து பேசு என்று சொன்ன பிறகு பேச சாப்பிட்டாச்சா என்று கேட்க ஏதாவது முக்கியமான விஷயமா நான் தூங்கப் போகிறேன் என்று சொல்ல பிறகு அந்தப் பெண் செழியன் இடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.

அடுத்த நாள் காலையில் கிச்சனில் செல்வியும் ராதிகாவும் சமையல் செய்து கொண்டே இருக்க செழியன் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். செல்வி கதை ஒன்றைக் கூறி கொண்டிருக்க, செல்வியை பாக்கியா கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் ராதிகா செல்வியை நகரு என்று டெரராக பேச, செல்வியும் தள்ளிப் போய் நிற்க்க காபி போட்டபடியே நேற்று நடந்ததை எல்லாம் நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்கல்ல என்று ராதிகா பாக்யாவிடம் கேட்க, பாக்யா கோபப்பட்டு முறைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+