கோபியால் ஏமாற்றத்தில் ராதிகா எடுத்த முடிவு..கண்ணீர் விடும் பாக்கியா..உணர்ச்சிகரமான தருணம்
சென்னை: இனியா மேடையில் தன்னுடைய மாற்றத்திற்கு அம்மா தான் காரணம் என்று பாக்கியாவை பெருமைப்படுத்துகிறார்.
இனியாவுக்காக கோபி ஸ்கூலுக்கு வந்தது ராதிகாவிற்கு தெரிந்து ராதிகா கோபப்படுகிறார்.
இனியாவின் மாற்றத்தை பார்த்து பாக்கியா கண்கலங்கி பீல் பண்ணுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 17ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் மேடையில் நிற்கும் இனியா நான் இந்த இடத்திற்கு நிற்க காரணம் என்னுடைய அம்மா தான் ஆரம்பத்தில் நான் அவங்கள ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரவே யோசிப்பேன். அவங்களுக்கு யார் கிட்டயும் பேச தெரியாது பழக தெரியாது என நானே அவங்களை திட்டுவேன்.
ஆனா இன்னைக்கு எங்க அம்மா ஒரு பிசினஸ் ரன் பண்றாங்க. 40 வயசில் இப்பவும் கிளாஸ் போய் புது புதுசா கத்துக்கிட்டாங்க. என்னுடைய இன்ஸ்பிரக்ஷனா இருக்காங்க. எங்க அம்மா படிப்ப பத்தி சொல்லி சொல்லி எனக்கு படிப்பு மேல ஆர்வம் அதிகமாகி அவரேஜ் ஸ்டுடென்ட்டா இருந்த நான் இன்னைக்கு இங்கே வந்து நிற்கிறேன். இது எல்லாத்துக்கும் காரணம் எங்க அம்மா தான் ஐ லவ் யூ மா என்று பேச பாக்யா கண்கலங்கி சந்தோஷப்படுகிறார்.
அது தொடர்ந்து இனியா கீழே இறங்கி வந்ததும் பாக்யா கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார். இதையெல்லாம் பார்த்து கோபி சந்தோஷப்பட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அதே சமயத்தில் ராதிகா மயூவை கூட்டிக்கொண்டு வந்து மயூவை அனுப்பிவிட்டு திரும்ப அப்போது கோபியின் காரை அங்கே பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
தொடர்ந்து கோபியும் இனியா பேசியதை வீடியோவாக பார்த்து ரசித்தபடியே அந்தப் பக்கமாக வர அதை ராதிகா பார்த்து விடுகிறார். பின்பு மயூவை பார்க்கத்தான் வந்ததாக சொல்லி சமாளிக்கிறார். அப்போது அந்த பக்கமாக வரும் ஒரு நபர் சூப்பரா உங்க மகள் பேசினா நீங்க வரலைன்னு நினைச்சேன் ஆனா வந்திருக்கீங்க என்று கோர்த்துவிட்டு போகின்றார். இதனால் ராதிகா கடுப்பாகிறார்.

வாயை திறந்தாலே பொய் என சத்தம் போட, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்க, கோபி இது இனியா படிக்கும் ஸ்கூல் எதுவா இருந்தாலும் காரில் போய் பேசுவோம் இப்படி சண்டை போட வேண்டாம் என்று ராதிகாவை காருக்குள் கூட்டிக்கொண்டு உட்கார வைக்கிறார்.
மறுபக்கத்தில் பாக்யாவும் எழிலும் ஒரு இடத்தில் அமர்ந்து இனியா வாங்கிய மெடலை பார்த்து கண்கலங்கி சந்தோஷப்படுகிறார். எழில் மற்றும் இனியா இருவரும் பேசியதை நினைத்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். பிறகு இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று கிளம்பி செல்கின்றனர்.
மறுபக்கத்தில் ராதிகா கோபியை சத்தம் போட்டு காருக்குள் வர சொல்ல இங்கே எதற்கு வந்தீர்கள் என கேட்டு உங்களை பார்த்தால் எனக்கு இப்போ கோபம் கோபமா வருது என்று முகத்தில் ஒரு குத்துவிடுகிறார். பிறகு கோபி இனியா இந்த ஸ்கூல்லையே கிரேட் ஸ்டூடன்ட் அவார்டு வாங்கினா, ரொம்ப சந்தோஷமா இருந்தது என சந்தோஷமாக கூற ராதிகா உங்க பொண்ண பத்தி சொல்லும்போது உங்க முகத்தில் அவ்வளவு பிரகாசம் தெரியுது என்று கோபத்தோடு திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications