பாக்கியாவிடம் அசிங்கப்பட்ட கோபி.. ஜெனி செய்த செயல்..எழில் கேட்ட கேள்வி.. பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: ஜெனி மற்றும் செழியன் இடம் பேச போன கோபியை செழியன் அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
அனைவர் முன்னிலையிலும் ஒரு காபிக்காக கோபி அவமானப்படுகிறார்.
தூங்கிக் கொண்டிருக்கும் ராதிகாவை பார்த்து கோபி புலம்பி தவிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே ஒன்றாம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் எழில், நிலா பாப்பா தூக்கம் வருதுன்னு சொன்னதுனால அமிர்தா தூங்க வச்சிட்டு இருக்கா என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே சாப்பாடு டெலிவரி பாய் வருகிறார்.
யாரு சாப்பாடு ஆர்டர் பண்ணது என்று ராமமூர்த்தி கேட்க, அதற்கு அந்த நபர் கோபி என்கிற பெயரில் வந்திருக்கிறது என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த பெயரில் இங்கு யாரும் கிடையாது. நாங்க இங்க எல்லாரும் நல்லா சாப்பிட்டு விட்டோம் அந்த பெயரில் இங்கு யாரும் கிடையாது என்று ராமமூர்த்தி கூற, டெலிவரி பாய் கோபிக்கு போன் போடுகிறார். பிறகு கோபி வந்து சாப்பாடை வாங்கிக் கொள்கிறார். பிறகு அந்த நபர் நீங்க இந்த வீட்டில் கிடையாது என்று இந்த தாத்தா சொன்னார் என்று போட்டுக் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

சாப்பாடு உடன் செல்லும் கோபியை பார்த்த ராமமூர்த்தி பாட்டு பாடி கிண்டல் செய்கிறார். பிறகு மாடியில் ஜெனியும் செழியனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் ஜெனியின் உடல் நலத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்க திடீரென்று நான் அப்பா விசயத்தில் செய்தது தப்பு என்று நினைக்கிறாயா? என்று செழியன் கேட்க, நீ செய்தது தப்பு இல்ல, ஆனா உங்க அப்பா மாதிரி ஏதாவது முடிவு எடுத்தா நான் உன்னை கொன்னுடுவேன் எனக்கு சீட்டிங் பண்ற உங்களை பிடிக்காது என்று ஜெனி கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்தப் பக்கமாக ஃபோன் பேசிக் கொண்டு வந்த கோபி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஜெனியிடம் டெலிவரி டேட் எப்போ என்று சொல்லிவிட்டார்களா? என்று கேட்க, அதற்கு ஜெனி எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு செழியன் இடம் கோபி கேட்க அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை இப்ப எதுக்கு இதை வந்து கேக்குறீங்க என்று செழியனும் பேசிவிட்டு கிளம்பி விடுகிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் பாக்யாவும், எழிலும் வாக்கிங் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது இருவரும் பேசியப்படியே வர எதிர்பக்கமாக வரும் கோபி இவர்கள் இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டு பின்பு செல்கிறா.ர் இதை பார்த்த எழில் கடுப்பாகி இவர் எதற்காக இப்படி பண்ணுகிறார் என்று அவர் ஏற்கனவே டென்ஷனில் இருக்கிறார். இப்படித்தான் பண்ணுவார் என்று பாக்கியா கூலாக பேசிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

அனைவருக்கும் காபி போட்டு கொடுத்த பாக்கியா கையில் காபி கப்போடு சென்று கொண்டிருக்க, அந்த நேரம் வீட்டிற்கு வரும் கோபி, காபி வாசனையில் மெய்மறந்து அந்த காபியை பாக்கியாவிடமிருந்து எடுத்து குடிக்க போகிறார். அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க பின்பு சுதாரித்துக் கொண்டு கீழே வைத்துவிட்டு மாடிக்கு சென்று விடுகிறார்.
கோபி காபி குடிக்க வந்ததை பார்த்த செல்வி அவருக்கு வந்த காபியில் விஷத்தை வச்சு கொடுத்து இருக்கணும் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் காபி மீது ஆசையில் இருக்கும் கோபி ரூமில் ராதிகா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறார். பின்பு அங்கிருக்கும் தண்ணியை குடித்துக்கொண்டு பாக்கியா வீட்டில் தண்ணி கூட ருசியாக தான் இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications