பாக்கியாவிற்காக பரிதாபப்படும் பழனிச்சாமி..கடுப்பாகும் கோபி..ராதிகாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: கோபி பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது போன்றவற்றை பழனிச்சாமி இடம் ராமமூர்த்தி கூறுகிறார்.
இனியாவை கோபி தன்னுடைய அறையில் வைத்து படிக்க வைத்து கொண்டு இருப்பதால்
ராதிகா கடுப்பாகிறார்.

ஆபீஸில் வேண்டும் என்றே பாக்யாவை காக்க வைத்து ராதிகா பழி வாங்குகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 22ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி ராமமூர்த்தியும் பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கோபி கையெழுத்து வாங்கிய விஷயம் உட்பட எல்லாத்தையும் பழனிச்சாமியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கேட்டு பழனிச்சாமியும் பீல் பண்ணுகிறார்.

அதை தொடர்ந்து கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் பாக்யாவிடம் வரும் பழனிச்சாமி எப்படி உங்களால் எவ்வளவு தைரியமாக இருக்க முடியுது உங்கள பத்தி நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் அம்மா அப்பா சொன்னாங்க என்று சொல்ல பாக்கியா தனக்காக குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் நிலையில் தான் எதற்காக கவலைப்பட வேண்டும் என்று சொல்ல அப்போ நான் இல்லையா என்று செல்வி கேட்க செல்வியைப் பற்றியும் பெருமையாக பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியாவின் தன்னம்பிக்கையை பழனிச்சாமி பாராட்டி கொண்டிருக்க பாக்கியா ஸ்வீட் செய்து கொடுத்து அதை பழனிச்சாமி ஆஹா ஓஹோ என்று பாராட்டிய படி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மாடியில் இருந்து வரும் கோபி இவர்கள் இருவரும் கிச்சனில் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறார்.

இவர்கள் இருவரையும் எதிர்த்து கேட்க வேண்டும் என்று நினைக்கும் கோபிக்கு எழில் மற்றும் செழியன் அன்று வாயை உடைப்பேன் என்று சொன்னது நினைவிற்கு வர புலம்பியபடி அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். பிறகு இனியா கிச்சனில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து வரும் கோபி வீட்டுக்கு வந்த ஹெஸ்ட் போயிட்டாங்களா என்று விசாரிக்கிறார்.
இனியா அப்பவே போய்ட்டாரு என்று சொல்ல, நீயேன் இங்கு உட்கார்ந்து படிக்கிற ரூம்பில் உட்கார்ந்து படிக்க வேண்டியதுதானே என்று கோபி கேட்க, எனக்குத்தான் ரூமே இல்லையே என்று சொல்ல கோபி ஆமாம் நாங்க தான் உன்னுடைய ரூமில் தங்கிட்டு இருக்கிறோம் சாரி என்று கூறுகிறார். பிறகு கோபி சரி வா ரூமில் வந்து படி என்று கூப்பிட அவங்க இருப்பாங்க நான் எப்படி வர முடியும் என்று இனியா மறுக்கிறார்.

அதற்கு அவங்க இல்ல நான் மட்டும்தான் இருக்கேன் என்று தன்னுடைய அறையில் இனியாவை கூட்டிக்கொண்டு சென்று படிக்க வைக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா கோபி இடம் பேச முயற்சி செய்ய கோபி கொஞ்ச நேரம் அமைதியா இரு குழந்தை படிச்சிட்டு இருக்கா என்று சொல்ல ராதிகா கடுப்பாகிறார்.
ராதிகா கடுப்பாவதை பார்த்து இனியா சிரித்து மேலும் வெறுப்பேற்றுகிறார். அடுத்த நாள் காலையில் ஆபீஸில் ராதிகா ரூமில் இருக்க பாக்கியா அவரிடம் கேண்டின் விஷயமாக பேச வந்திருப்பதாக சொல்ல, ராதிகா தொடர்ந்து பாக்யாவை வெளியே காத்திருக்க வைத்து வெறுப்பேற்றுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications