ஈஸ்வரியால் கடுமையான வார்த்தையை கேட்ட கோபி..அடித்து விட்டு வீட்டை விட்டு கிளம்பிய ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்யாவிற்கு கேண்டினில் பிரச்சனை கொடுத்ததற்காக ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார்.

ஈஸ்வரிக்கு ஆதரவாக கோபியும் கடுமையான வார்த்தைகளை பேசி திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார்.

ராதிகாவின் அம்மா நீ வீட்டை விட்டு கிளம்பி வந்தது தப்பு என்று ராதிகாவிற்கு அட்வைஸ் பண்ணுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 24th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 24ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது எழில், செழியன், அமிர்தா, ஜெனி எல்லோரும் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ராதிகா வீட்டிற்குள் என்ட்ரி ஆகிறார்.

வீட்டுக்கு வந்த ராதிகா நேராக கிச்சனுக்குள் நுழைய அங்கிருந்த பாக்யா வெளியே வந்து விடுகிறார். ராதிகா பாத்திரத்தை எடுக்கும்போது இன்னொரு பாத்திரம் தவறுதலாக கீழே விழ இதனால் கடுப்பான ஈஸ்வரி உள்ளே எழுந்து சென்று சண்டை போடுகிறார். ராதிகா தவறாக தான் பாத்திரம் விழுந்தது என்று விளக்கம் கொடுக்கிறார்.

பிறகு உன்னை யாரு பாத்திரத்தை பத்தி கேட்டது உன்னால சும்மா இருக்க முடியாதா? நீ எதற்கு பாக்யா கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்க, முதலில் கேண்டீன் ஆர்டர் எடுக்க கூடாதுன்னு ஏதோ சரி பண்ணுன இப்போ அதற்குப் பிறகு சுடிதார் போட்டுட்டு வரணும்னு கண்டிஷன் போட்டு தினம் தினம் பாக்கியா கிட்ட சண்டைக்கு போட்டுட்டு இருக்கா என்று திட்ட, ஓ.. சின்ன குழந்தை இங்கேயும் வந்து கம்ப்ளைன்ட் பண்ணிடுச்சா என்று பாக்யாவை நக்கல் அடிக்க ஈஸ்வரி மேலும் கோபம் வருகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 24th promo and Episode Highlights

அவ குழந்தை மாதிரி பண்ணிக்கிட்டு இல்ல நீ தான் சின்ன குழந்தை மாதிரி பாக்கியா கிட்ட சண்டைக்கு போட்டுட்டு இருக்க, பாக்கியா கோடீஸ்வரன் சார் கிட்ட சொல்ற வரைக்கும் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று ஈஸ்வரி எச்சரிக்கை செய்ய அதற்கு ராதிகா உங்களுக்கு பாக்கியா தானே பெஸ்ட் என்று சொல்ல ஆமா அவா மட்டும்தான் பெஸ்ட் நீயெல்லாம் அவ கால் தூசிக்கு வர மாட்ட என்று திட்டுகிறார்.

அந்த நேரம் பார்த்து கோபி வீட்டிற்கு வர இவர்கள் சண்டையை பார்த்து கோபி அதிர்ச்சி அடைந்து நிற்க, உங்க அம்மா என்னவெல்லாம் பேசுறாங்க பாருங்க, என்னன்னு கேளுங்க என்று கோபியிடம் ராதிகா சொல்ல, கோபி ராதிகாவை திட்டுகிறார். நீ வர வரைக்கும் இந்த வீடு அமைதியா நிம்மதியா, சந்தோஷமா இருந்துச்சு. நீ வந்ததுக்கப்புறம் தினம் தினம் சண்டை தான் நடக்கிறது. எல்லார் நிம்மதியும் போயிடுச்சு என்று திட்ட ராதிகா கோபித்து ரூமிற்கு செல்கிறார்.

மேலே ரூமில் என்னால உங்க எல்லோருக்கும் நிம்மதி போயிடுச்சா என கோபியோட சண்டை போட, ஆமாம் அதுதான் உண்மை. நீ வாயை மூடிக்கொண்டு இருக்கிற வரைக்கும் இங்கே எதுவும் மாறப் போகிறது இல்ல என்று அடுக்கடுக்காக எல்லா தப்புக்கும் ராதிகா தான் காரணம் என்று கோபி பழியை தூக்கி போட ராதிகா கடுப்பாகி அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து விட்டு கோபியை கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போய் விடுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 24th promo and Episode Highlights

இதைப் பார்த்த செல்வி ராதிகா எங்கே போகிறார் என்று வெளியே ஓடிப் போய் பார்த்துவிட்டு வீட்டில் வந்து அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுச்சு என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி ரொம்ப சந்தோஷம் திரும்பி வராம இருந்தா நல்லது என்று சொல்ல, அப்படியே உன் பையனும் போயிட்டானா ரொம்ப நல்லா இருக்கும் என்று ராமமூர்த்தி பதிலடி கொடுக்கிறார்.

ராதிகா மயூவிடம் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருக்க ராதிகா அம்மா இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இங்க வந்த, கோபியோட அப்பா நான் அம்மா சப்போர்ட் இல்லாம அந்த வீட்ல எதுவும் நடக்காது. நீ பாக்கியா மாதிரி நல்லவ மாதிரி தான் நடிக்கணும் என்று சொல்ல ராதிகா அப்படியெல்லாம் என்னால நடிக்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் அவருடைய அம்மா நீ அந்த வீட்டில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நடித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+