மீண்டும் வீட்டுக்கு வந்த ராதிகா.. பாக்யா கொடுத்த அதிர்ச்சி.. கெஞ்சும் கோபி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: கோபி போனை எடுக்காததால் ராதிகா மீண்டும் கோபியின் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
ராதிகா வீட்டுக்கு வந்தது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று பாக்கியா அதிர்ச்சி கொடுக்கிறார்.
பாக்கியாவிடம் ஒரு காபிக்காக கோபி கெஞ்சி கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 27ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் இனியா, ராமமூர்த்தி, ஈஸ்வரி மூவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா அவங்க வந்துட்டாங்களா? என்று கேட்க ஈஸ்வரி இனி மேல் ராதிகா வரமாட்டா என்று சொல்ல, அதற்கு உன்கிட்ட சொன்னாளா என்று ராமமூர்த்தி கேட்கிறார்.
இப்போது அங்கே கோபி வர ஈஸ்வரி கோபி இடம் நலம் விசாரித்தபடியே பாக்யாவை காபி போட கூறுகிறார். அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க என்று இனியா சொல்ல, ஈஸ்வரியே போய் காபி போட்டு கொடுத்து ராதிகா இனிமே உனக்கு வேணாம், விவாகரத்து பண்ணிடுன்னு என்று பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் சரியாக வீட்டுக்கு ராதிகா வந்து விடுகிறார்.
பிறகு வழக்கம் போல ராதிகாவும் ஈஸ்வரியும் வாக்குவாதம் செய்ய, நீ வந்ததால தான் அவன் வாழ்க்கை இப்படி நாசமா போச்சு என்று ஈஸ்வரி சொல்ல, கோபி அமைதியாக இருக்க ராதிகாவிடம் உன்னை எப்படியும் நான் இந்த வீட்டை விட்டு அனுப்பி வைத்து விடுவேன் என்று ஈஸ்வரி சபதம் போடுகிறார்.
இவர்களின் சண்டையை தீர்த்து வைக்க கோபி ராதிகாவை ரூமுக்கு கூட்டிட்டு போய்விட அங்கே போய் கோபியும் ராதிகாவும் சண்டை போடுகின்றனர். அப்போது கோவிலுக்கு போன பாக்யா வீட்டிற்கு வந்ததும், செல்வி நடந்த விஷயங்களை பற்றி பாக்கியாவிடம் கூறுகிறார். ஆனால் பாக்கியா எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்.
அவங்க எங்க இருந்தாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. எனக்குன்னு ஒரு தனித்துவமும், அடையாளமும் கிடைச்சிருக்கு அதை எக்காரணம் கொண்டு நான் இழக்க விரும்பல என்று பாக்கியா கூற, அதே நேரத்தில் கோபியும் ராதிகாவும் மீண்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்க கோபி எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் அமைதியா இரு என்று சொன்னாலும் ராதிகா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தலைவலியில் நான் போகிறேன் என்று ரூமை விட்டு கோபி கீழே வர, அங்கே ராமமூர்த்தி காபி சாப்பிட்டுக் கொண்டு இருக்க தனக்கு காபி குடிக்குகனும் போல இருக்கிறது கேட்டா தர மாட்டாங்க என்று பீல் பண்ணிக்கொண்டு பிறகு செல்வியிடம் கெஞ்சி தைலம் கேட்டு வாங்கி தடவுகிறார்.
பிறகு ராமமூர்த்தி காபி குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து தன்னால் அடக்க முடியாமல் காபி போட்டுக் கொடு ப்ளீஸ் என்று பாக்யாவிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications